பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவின் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் அணி ஸ்பெயினின் கானல்ஸ் எலியா மற்றும் அச்சா கோன்சலஸ் பாப்லோ அணியை எதிர்கொண்டது.
🇮🇳 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱 𝗰𝗼𝗻𝘀𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲 𝘄𝗶𝗻! The Indian duo of Dhiraj Bommadevara and Ankita Bhakat extend their winning streak to move just one win away from securing a historic first medal for India in the Olympics.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 2, 2024
🏹 Final score: India 5 - 3 Spain
⏰ They will next… pic.twitter.com/93fOusB8Ws
அபாரமாக விளையாடிய இந்திய அணி 5-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது. தொடக்கம் முதலே நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் துரித புள்ளிகள் சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. மேலும் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பையும் இருவரும் பெற்றனர்.
இதையும் படிங்க: வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய பாக். ரசிகர்! தரமான செய்கை செய்த ஹர்பஜன்! என்ன நடந்தது தெரியுமா? - Harbhajan Singh