ETV Bharat / sports

IND vs ENG: ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசல்.. முதல் நாளில் இந்தியா அதிரடி! - Ind vs Eng 3rd test cricket

India vs England: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.

india-vs-england-3rd-test
india-vs-england-3rd-test
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 6:19 PM IST

Updated : Feb 16, 2024, 1:48 PM IST

ராஜ்கோட்: இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா மைதானத்தில் இன்று (பிப். 15) தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனராக களமிறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து இருந்த போது, ஜோ ரூட் வீசிய பந்தில் மார்க் வூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சுப்மன் கில் வந்த வேகத்தில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ராஜ் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - ரவீந்திர ஜடேஜா கூட்டணி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசினர். பின்னர் 131 ரன்கள் எடுத்து இருந்த போது மார்க் வூர் வீசிய பந்தில், பென் ஸ்டோக்ஸ்கிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய சர்பரஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்து அசத்திய அவர் 62 ரன்கள் எடுத்து இருந்த போது தேவையின்றி ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் நிதானமான விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடன், குல்தீப் யாதவ் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வூட் 3 விக்கெட்டுகளும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 2வது நாள் ஆட்டம் நாளை காலை (பிப்.16) 9 மணிக்கு தொடங்க உள்ளது.

இதையும் படிங்க: RSA VS NZ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து பின்னடைவு..!

Last Updated : Feb 16, 2024, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.