ஐதராபாத்: இண்டிகோ விமானத்தில் முன் இருக்கைக்கு பணம் செலுத்தி டிக்கெட் பெற்ற முதிய தம்பதியை எவ்வித காரணமும் இன்றி, பின் இருக்கைக்கு இண்டிகோ விமான ஊழியர்கள் மாற்றியதற்கு கண்டனம் குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹர்ஷா போக்லே எக்ஸ் பதிவு:
அந்த பதிவில், "இண்டிகோ விமானத்தில் 4ஆம் எண் இருக்கைக்கு டிக்கெட் எடுத்த வயதான தம்பதியை விளக்கம் ஏதும் அளிக்காமல், 19வது இருக்கைக்கு இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றினார். அந்த வயதான தம்பதி, நீண்ட நேரமாக போராடி தன் இருக்கைக்கு சென்றனர்.
நடக்க முடியாமல், அந்த முதியவர் குறுகிய பாதையில் தட்டுத் தடுமாறியபடி சென்றதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. குறிப்பிட்ட இருக்கைக்கு டிக்கெட் புக் செய்து இருந்த ஒருவரை எவ்வித உரிய காரணமும் கூறாமல் எப்படி இடமாற்ற முடியும். அவர்களுக்கு உரிய இழப்பீடை யார் வழங்குவார்கள்.
Another example of #IndigoFirstPassengerLast. An elderly couple on my flight had paid for seats in row 4 so they wouldn't have to walk much. Without an explanation, #Indigo changed it to seat 19. The gentleman was going to struggle to walk till row 19 in a narrow passage. But who…
— Harsha Bhogle (@bhogleharsha) August 24, 2024
வயதான பயணிகளுக்கு இப்படி ஒரு துன்பம் கொடுத்ததை பொறுத்து கொள்ள முடியாது. இது அநியாயம் என்று பயணிகள் சிலர் எதிர்த்துக் குரல் கொடுத்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த தம்பதிக்கு அவர்கள் கேட்டிருந்த இருக்கை ஒதுக்கித் தரப்பட்டது. ஆனால், இதற்காக அவர்கள் சிரமப்பட்டு குரல் கொடுக்க வேண்டியிருந்தது.
எப்போதும் பயணிகள் வசதிக்கே முன்னுரிமை அளிக்குமாறு ஊழியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்த வேண்டும். வெற்றிகரமாக ஒரு பணியை செய்யும்போது, அதற்கு தகுந்தபடி பொறுப்பும் அதிகரிக்க வேண்டும். இந்திய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுபவன் என்ற முறையில், பயணிகளின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அக்கறையற்ற செயல்பாடு நிறுவன வழிமுறையாகி விடக்கூடாது" என்று ஹர்ஷா போக்லே தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இண்டிகோ பதில்: இந்த சம்பவத்திற்கு உடனடியாக பதில் அளித்த இண்டிகோ நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, எங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.
உங்கள் புரிதலை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். விரைவில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய எதிர் நோக்குகிறோம். பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" அந்த பதிவில் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பேட் ஸ்பான்சர் மூலம் கோடியில் புரளும் சுப்மன் கில்! விராட் கோலிக்கு ஈடாகுமா! - Shubman Gill Bat Sponsorship