அகமதாபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.13) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற இருந்த 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
அகமதாபாத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் மழை கொட்டத் தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மைதானத்தில் மழை நீர் போல் தேங்கியது. சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் இடைவிடாது கனமழை கொட்டியதால் ரசிகர்கள் விரக்திக்குள்ளாகினர்.
தொடர்ந்து மழை பெய்ததாலும் மைதானத்தில் மழைநீர் தேங்கியதை தொடர்ந்து ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் பிரித்து கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதேநேரம் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தொடர்கிறது. ஆட்டம் கைவிடப்பட்டதால் குஜராத் அணியின் பிளே ஆப் கனவு கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் பி.ஏ தாக்கியதாக சுவாதி மலிவால் புகார்! என்ன நடந்தது? ஏன் வழக்குப்பதிவு இல்லை? சமரச பேச்சா? முழு விபரம்! - Swati Maliwal