கான்பூர்: வங்கதேசம் - இந்தியா அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. தொடர் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முன்னதாக முதல் நாள் பெய்த தொடர் கனமழை காரணமாக கான்பூர் கிரீன் பார்க் மைதானம் ஈரமாக காணப்பட்டது.
இதனால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய வங்கதேச அணி தற்போது வரை 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்துள்ளது. போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுவது என்ன?:
அடுத்த நான்கு நாட்களுக்கு கான்பூரில் மழை வெளுத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. முதல் நாளான இன்று (செப்.27) இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க 93 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளையும் (செப்.28) 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
UPDATE 🚨
— BCCI (@BCCI) September 27, 2024
Due to incessant rains, play on Day 1 has been called off in Kanpur.
Scorecard - https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/HSctfZChvp
அதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் 65 சதவீதமும், நான்காவது நாளில் 59% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மைய அறிக்கைகள் கூறுகின்றன. கடைசி நாளில் மட்டும் 5% மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வங்கதேசம் அணி எப்படி?:
இதனால் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும்பாலும் டிராவை நோக்கியே பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் ஷகிர் ஹசன் டக் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷத்மன் இஸ்லாம் 24 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 31 ரன்களும் குவித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மொமினுள் ஹக் (40 ரன்), முஸ்பிகுர் ரஹிம் (6 ரன்) ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மனு பாக்கர் துப்பாக்கி விலை இவ்வளவா? நம்ம வாங்க முடியுமா? - Manu Bhaker