சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டிகள் இம்மாதம் 11 வரை நடைபெறவுள்ளது.
7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகேசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளனர்.
இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் -சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இப்போட்டியில் கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ், எம்.பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள்.
And the matches are set! 🔥 The draw event on November 4th has laid the groundwork for thrilling matches ahead.
— Sports Tamil Nadu (@SportsTN_) November 5, 2024
.
.
.
.#Chennaigrandmasters #SDAT #SportsTN @CMOTamilnadu @Udhaystalin @TNDIPRNEWS @ChessbaseIndia @mgd1_esports @Chennai_GM pic.twitter.com/evR1t6O5fN
பரிசு: மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி இன்று மாலை தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் மாஸ்டர் பிரிவின் முதல் சுற்று போட்டிகளில், அரவிந்த் சிதம்பரம் - எம்.அமின் ஆகியோரும், மாக்ஸூட்லு பர்கான் - லாக்ரேவ் மேக்ஸ்சிம், விதித் குஜராத்தி - அர்ஜுன் எரிகேசி, மற்றும் ஆரோனின் லெவோன் - சரனா அலக்ஸ்சி ஆகியோர் விளையாடினார்.
இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் சேலஞ்சர் பிரிவில் வைஷாலி - மெண்டோன்க லியோன் லியூக் ஆகியோரும், கார்த்திகேயன் முரளி - ரோணக் சத்வானி, பிரனேஷ் - பூர்ணிக் அபிமன்யூ, துரோனவல்லி - பிரனவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபிஎலில் ரூ.13 கோடிக்கு தக்கவைப்பு! மொத்த காசையும் கொண்டு புது வீடு வாங்கிய வீரர்! யார் தெரியுமா?
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு? இதுகுறித்து செஸ் ஒலிம்பியாட் அணியின் கேப்டனும், சென்னை கிரான்ட் மாஸ்டர் தொடரின் இயக்குநருமான ஸ்ரீநாத் நாராயணன் கூறுகையில்,"சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து தமிழ்நாடு அரசு செஸ் போட்டிகளுக்கு அதிக ஆதரவு அளித்து வருகிறது.
கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் இந்திய வீரர் வெற்றி பெற்றால் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற முடியும்.
அதில் வெற்றி பெற்றால் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் செஸ் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு இந்திய வீரர்கள் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது" என தெரிவித்தார்.