ஐதராபாத்: இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசத்திற்கான எதிராக இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. அதற்கு முன் புச்சிபாபு மற்றும் துலிப் கோப்பை ஆகிய இரண்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர். இந்த இரண்டு முதல் தர போட்டித் தொடர்களிலும் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றது முதல் கவுதம் கம்பீர் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி பார்க்கையில் புச்சிபாபு மற்றும் துலிக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் ஜொலிக்கும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வளமான எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு முதல் தர போட்டிகளில் ஜொலித்த போதும் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என இளம் வீரர் சர்பரஸ் கான் தனது மனக் குமுறலை தெரிவித்துள்ளார். பல்வேறு முதல் தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போதும் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சர்பரஸ் கான், "எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் களம் இறங்குகிறேன். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முயலுங்கள். அதைத்தான் இதுவரை செய்து வருகிறேன். இனி வரும் காலங்களிலும் இதே போக்கு தான் தொடரும். நிச்சயம் எனது கேரியருக்கும் ஒரு பிரேக் வரும் என நினைக்கிறேன். அப்படி நடந்தால் எனக்கு ஒரு ப்ளஸ் ஆக அது அமையும்.
பெரும்பாலும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதும், அதிக நேரம் செலவிட விரும்புவதும் சிறந்த பேட்ஸ்மேனாக மாற வாய்ப்பு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான சர்பரஸ் கான், தொடக்க ஆட்டத்தில் அரை சதம் விளாசினார்.
மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சர்பரஸ் கான் 200 ரன்களை குவித்தார். அதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். அது குறித்து பேசிய அவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய போது முதல் மூன்று பந்துகளை எதிர்கொள்ள தடுமாறியதாகவும், அதன் பின் ஆட்டம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லண்டனில் குடியேறும் விராட் கோலி! அடிக்கடி லண்டன் பயணத்தின் பின்னணி என்ன? - Virat Kohli Cross Road Viral Video