ETV Bharat / opinion

தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாதிப்புகளும், சாத்தியக்கூறுகளும்! - census delay - CENSUS DELAY

கரோனா காரணமாக ஒத்திபோடப்பட்ட 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இதுநாள்வரை மேற்கொள்ளப்படாததால் எஸ்.சி.-எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீடு, உணவு மானியம் பெறுவதில் பயனாளிகளுக்கு சிக்கல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகள் குறித்தும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது சாத்தியம் என்பது பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை.

மக்கள்தொகை குறித்த சித்தரிப்பு படம்
மக்கள்தொகை குறித்த சித்தரிப்பு படம் (Credits - Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 6:55 PM IST

ஹைதராபாத்: ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திய கோவிட் -19 தொற்று காரணமாக 2021 இல் நடத்தப்பட வேண்டிய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி முதலில் இரண்டு ஆண்டுகள் ஒத்திபோனது. கரோனா தொற்று காலத்திற்கு பிறகு, உலகின் பல நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருந்தாலும் அவை எதுவும் மக்கள்தொகை எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவுடன் ஒப்பிட முடியாதவையாக இருந்தன.

காரணங்கள்: தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் எழுந்த சர்ச்சைகள், குடியுரிமைச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மற்றும் அதன் விளைவாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) குறித்து பரவலாக எழுந்த விமர்சனம் மற்றும் இப்பதிவேட்டை தயாரிக்க மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க இயலாது என்று சில மாநிலங்கள் பகிரங்கமாக அறிவித்தது போன்றவை மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

தாமதத்தின் விளைவுகள்: மக்கள்தொகை எண்ணிக்கைக்கேற்ப புதிய நகராட்சிகளை சீராக உருவாக்குவதும், ஏற்கெனவே உள்ள நகராட்சிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதும் முக்கியமான பணியாகும். இதற்கு கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள்தொகை உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் குறித்த சமீபத்திய விவரங்கள் அவசியமாகிறது. இந்த விவரங்கள் அனைத்தையும் பெறுவதற்கு ஒரே வழி மக்கள்தொகை கணக்கெடுப்புதான். ஆனால் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாததால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே தோராயமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய உள்ளாட்சிகளை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை வைத்து, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை மறுசீரமைக்க இயலாத நிலையும் நீடிக்கிறது. இதேபோன்று, நகரமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பழைய புள்ளிவிவரங்களை கொண்டு, ஒரு நகரின் மக்கள்தொகையை கணிப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மொத்தத்திவ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கான கொள்கைகள் அல்லது திட்டங்களை, காலாவதியான மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே வகுக்க வேண்டியுள்ளது.

உணவு மானியம் பெறுவதில் சிக்கல்: உணவு மானியத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை அறிய, மக்கள்தொகை தரவுகளை பயன்படுத்தும்படி, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் சொல்கிறது. ஆனால், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், கோடிக்கணக்கான உணவு மானிய திட்ட பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிந்தபின், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள்தொகையை மதிப்பீட வேண்டும் என்றும் இச்சட்டம் சொல்கிறது.

எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீடு: மக்கள்தொகை எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் இல்லாததால், நாடு முழுவதும் பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியின (எஸ்.டி) சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்பதை அறிய முடியாமல் உள்ளது. இதனால் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் இவர்களுக்கான இடஒதுக்கீடு துல்லியமாக இல்லாமல் இருக்கிறது.

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது சாத்தியம்?: 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டு, இக்கணக்கெடுப்பை நடத்தும் அமைப்பு, அதற்கு முந்தைய. வீடுகளின் எண்ணிக்கையை கணக்கிட 2020இல் ஆயத்தமானது. நாடு முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பெரும்பாலான மாநிலங்கள், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 10 மாதங்களுக்கு முன்பே வீடுகள் பட்டியலை கணக்கிடும் பணியை நடத்தின. மேலும், பெரும்பாலான மாநிலங்கள், பருவமழை காலத்துக்கு பின், மே மாதத்தில் தான் வீடுகள் கணக்கிடும் பணியை மேற்கொண்டன.

இதன்படி பார்த்தால், தற்போது 2026-க்கு முன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. அதுவும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியை 2025 இல் மேற்கொண்டால், மக்கள்தொகை கணக்கெடுப்பை 2026 இல் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி 2026 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் தொகுதிகளை மறுவரையறை செய்ய, சட்டப்படி மற்றொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டிவரும். இதற்காக, மத்திய அரசு 2031 இல் மீண்டுமொரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துமா என்பதை இப்போதே சொல்வது கடினம்.

கட்டுரையாளர்: கே நாராயணன் உன்னி, ஓய்வுபெற்ற அதிகாரி - இந்திய புள்ளியியல் துறை பணிகள். 2011 மற்றும் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொலைக்காட்சி விவாதத்தில் ஓங்கி ஒலித்த ட்ரம்ப் குரல்; அடக்கி வாசித்த பைடன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.