ETV Bharat / lifestyle

மட்டன் பஞ்சு மாதிரி வேக வேண்டுமா? அட்டகாசமான 8 டிப்ஸை ஃபாலோ பண்ணிப்பாருங்க! - TIPS TO COOK MUTTON PERFECT

மட்டனை சுவையாகவும், மென்மையாகவும் சமைப்பதற்கான டிப்ஸ் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - Getty images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 17, 2024, 5:05 PM IST

ஆசை ஆசையாக மட்டன் எடுத்து சமைத்த பின், கறி சரியாக வேகவில்லை என்றாலோ அல்லது அதிகம் வெந்து விட்டாலோ அவ்வளவுதான், குழம்பின் சுவையே கெட்டு விடும். அதன் கூடவே மனமும் கவலையடைந்து விடுகிறது. வீட்டில் எத்தனை முறை மட்டன் செய்திருந்தாலும், சமைத்தவுடன் பஞ்சு போல் இருப்பது என்பது அறிதே. இந்த மாதிரியான பிரச்சனைகளை இனி வராமல் இருக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..

கல் உப்பு: ஆட்டிறைச்சியை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாதவாறு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மட்டனில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அனைத்து இடங்களிலும் படும் வகையில் கலந்து விட்டு,ஒரு மணி நேர ஊற வைக்கவும். பின்னர், சமைத்து பாருங்கள் மட்டன் பஞ்சு போல் வெந்திருக்கும்.

டீ: மட்டனை சமைப்பதற்கு முன், டீ டிக்கசனை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, நாம் கழுவி எடுத்துவைத்துள்ள மட்டனில் டிக்கசனை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு, அந்த மட்டனில் குழம்பு, சுக்கா என என்ன செய்தாலும் சீக்கிரமாக வெந்துவிடும்.

வினிகர் அல்லது எலுமிச்சை சாறு: ஆட்டிறைச்சியை விரைவாக சமைக்க வினிகர் அல்லது எலுமிச்சை சாறும் பயன்படுத்தலாம். இவை அமில பண்புகளைக் கொண்டிருப்பதால், மட்டனை வேகமாக சமைக்க உதவுகின்றன மற்றும் மட்டன் குழம்பிற்கும் கூடுதல் சுவையை சேர்க்கின்றன.

தக்காளி: மட்டன் சீக்கிரமாக வேக தக்காளியும் பயன்படுகிறது. சமைக்கும் போது மட்டனை சேர்ப்பதற்கு முன் தக்காளி விழுது அல்லது தக்காளி சாஸ் சேர்த்தால், மட்டன் நன்றாக வேகும். சிலர் மட்டன் இறைச்சியை சேர்த்ததற்கு பின்னர் இறுதியாக தக்காளியை சேர்ப்பார்கள். ஆனால் மட்டனை சேர்ப்பதற்கு முன் தக்காளியை சேர்த்தால் மட்டன் வேகமாக வெந்துவிடும்.

இதையும் படிங்க: இனி சிக்கன் எடுத்தால் ஹைதராபாத் ஸ்டைல் ​​'க்ரீன் சிக்கன் கறி' செய்து பாருங்கள்..செம ருசி!

பப்பாளி இலை: ஆட்டிறைச்சியை சாப்டாக சமைக்க பப்பாளி இலை அல்லது பப்பாளி காயை பயன்படுத்தலாம். இதில் உள்ள பெப்பைன் இறைச்சியை மென்மையாக்க உதவுகிறது.

இஞ்சி: ஆட்டிறைச்சி விரைவாகவும் மென்மையாகவும் சமைக்க இஞ்சி உதவியாக இருக்கிறது. பொதுவாக மட்டன் குழம்பு, சுக்கா என மட்டனின் எது செய்தாலும் இஞ்சி-பூண்டு விழுதை பயன்படுத்துவோம். அப்படிச் செய்யாமல் முதலில் இஞ்சி விழுதைச் சேர்த்து, சிறுது நிமிடங்களுக்கு பின் பூண்டு விழுதைச் சேர்த்தால், மட்டன் சீக்கிரம் வேகும்.

தயிர்: ஆட்டிறைச்சியை சமைப்பதற்கு முன் ஒரு மணி நேரம் தயிரில் ஊறவைத்தால் மட்டன் வேகமாக வேகும். தயிர் இல்லை என்றால் மோரை பயன்படுத்தலாம். கூடுதலாக, கறி மென்மையாகவும் இருக்கும்.

பழங்கள்: மட்டன் சாப்டாக இருக்க சமைக்கும் போது பழங்களை பயன்படுத்தலாம். கிவி, அன்னாசி மற்றும் பப்பாளி போன்ற பழங்களில் உள்ள என்சைம்கள் ஆட்டிறைச்சியை வேகமாக வேக வைக்க உதவுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு பழத்தை பேஸ்ட் செய்து, ஆட்டிறைச்சியுடன் சிறிது அளவு சேர்த்தால் போதும். சட்டென மட்டன் வெந்து விடும்.

இதையும் படிங்க: மட்டன் பிரியரா நீங்கள்?..சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.