புத்தாண்டிற்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், பலர் ஏற்கனவே விடுமுறைகளுக்குச் சென்றிருக்கலாம், சிலர் பல திட்டங்கள் வைத்திருக்கலாம், இன்னும் சிலர் என்ன செய்வது? எங்கு போவது என தெரியாமல் இருக்கலாம். அதில் நீங்களும் ஒருவரா? இந்தப் புத்தாண்டில் வழக்கமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைப் பெற, இந்த மலைவாசஸ்தலங்களுக்கு சென்று புத்தாண்டை புன்னகையுடன் வரவேறுங்கள்.
டார்ஜிலிங் (Darjeeling) : நகரங்களின் இரைச்சலிலும், நெரிசலிலும் இருந்து விடுபட்டு மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் இடத்திற்கு செல்ல நினைப்பவர்களுக்கு டார்ஜிலிங் சிறந்த தேர்வு. கஞ்செஞ்சுங்கா மலைகளின் பனியும், பச்சை பசையென்று இருக்கும் தேயிலை தோட்டங்களும் வியப்பை ஏற்படுத்தும். மலைகளுக்கு நடுவே செல்லும் டாய் டிரைன் கண்கொள்ளா காட்சியாகவும், புத்தாண்டில் நேரம் செலவிட புது அனுபவமாக இருக்கும்.
ஏற்காடு (Yercaud) : தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானலை போல கொள்ளை அழகை கொண்டிருப்பது தான் ஏற்காடு. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள அமைதியான மலைவாசஸ்தலம், பசுமையான காபி தோட்டங்கள் மற்றும் கண்ணுக்கினிய காட்சிகளால் சூழப்பட்டுள்ளது. புத்தாண்டிற்கு இங்கு நீங்கள் செல்வதாக இருந்தால், ஏற்காடு ஏரி, பகோடா பாயிண்ட் மற்றும் சில்க் பண்ணை ஆகியவற்றை கட்டாயம் பார்வையிடுங்கள்.
பெல்லிங் (Pelling): சிக்கிம் மேற்கு மாவட்டத்தில் உள்ள அழகிய நகரமான பெல்லிங் முக்கிய சுற்றுலாத் தலமாகும். உலக புகழ்பெற்ற பெமயங்ஸ்டே மடாலயம் (Pemayangste Monastery) இங்கிருந்து ஒரு கி.மீக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. டிரக்கிங், தியான செய்ய சிறந்த இடம். பிரபலமான மற்றும் பழமையான புத்த மடாலயங்கள் இங்கு அமைந்துள்ளன. சாகச ஆர்வலர்களுக்கும், அமைதியை விரும்புவர்களும் வரும் புத்தாண்டில் இங்கு நேரம் செலவிட்டு புது அனுபவத்தை பெறுங்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல இருந்துட்டு இந்த 6 இடங்களுக்கு போகலைனா எப்படி? கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாது!
அரக்கு பள்ளத்தாக்கு (Arakku Valley): கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு தென்னிந்தியாவின் பொக்கிஷமாக இருக்கிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் பழங்குடியின கிராமங்களால் சூழப்பட்ட இந்த மலைப்பகுதியின் ஒவ்வொரு இடமும் வியக்கச்செய்யும். போரா குகைகள், பழங்குடியினர் அருங்காட்சியகம் ஆகியவை இங்கிருக்கும் சிறப்பம்சம். புத்தாண்டில் புது அனுபவத்தை பெற கண்டிப்பாக இங்கு சென்று வாருங்கள்.
சிம்லா (Simla): பனி மூடிய மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளின் அழகிய நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ள சிம்லா இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. ஆண்டு முழுவதும் மக்களுக்கு சிறந்த காலநிலையை வழங்கும் சிம்லா மனதிற்கு இதமான அனுபவத்தை தரும். டாய் டிரைன், ஷாப்பிங், சாகச நடவடிக்கைகள் மற்றும் சிம்லாவின் உணவுகள் அழகான அனுபவத்தை தரும்.
இதையும் படிங்க:
டிசம்பரில் கேரளாவுக்கு போறீங்களா? அப்படியே, இந்த 5 இடங்களுக்கு ஒரு விசிட் போடுங்க!
தமிழகத்தில் இத்தனை ரொமான்டிக் இடங்களா? மனதிற்கு பிடித்தவருடன் கட்டாயம் ஒருமுறை சென்று வாருங்கள்!