ETV Bharat / international

"ஜனவரி 20ஆம் தேதிக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்...."-ஹமாஸ் இயக்கத்தினருக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை! - TRUMP WARNS

காசாவில் ஹமாஸ் பிடியில் உள்ள பிணைகைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.அப்படி விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் (Image credits-AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 1:08 PM IST

நியூயார்க்: காசாவின் ஹமாஸ் இயக்கத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைகைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் அமெரிக்க அதிபராக தாம் பதவி ஏற்கும் முன்பு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"தயவு செய்து நேர்மறையான முடிவு நேரிடுவதற்கு அனுமதியுங்கள். அமெரிக்க அதிபராக நான் கவுரவத்துடன் பதவி ஏற்கும் தேதியான அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் அனைவரும் அல்லது பொறுப்பில் இருப்பவர்கள் மனித குலத்திற்கு எதிராக இந்த கொடுமைகளை செய்தவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்," என ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இதற்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, யாரும் இதுவரை தாக்காத அளவுக்கு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். எனவே பிணைய கைதிகளை இப்போதே விடுவியுங்கள்," என்றும் கூறியுள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுமா என்பதை குறிக்கும் விதமாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

டிரம்ப் எச்சரிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக கருத்து சொல்லவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், டிரம்ப்பின் எச்சரிக்கையை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்பை ஆசிர்வதிக்கின்றேன். நன்றி தெரிவிக்கின்றேன். நமது சகோதரர்கள், சகோதரிகள் விரைவில் வீடு திரும்ப நாம் எல்லோரும் இந்த தருணத்தில் பிராத்திப்போம்,"என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்டு டிரம்ப்....இந்தியாவில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதியில் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட 1200 பேர்கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை அவர்கள் பிணைய கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அவர்களில் 100 பேர் இன்னும் காசாவில் ஹமாஸ் பிடியில் உள்ளனர். பிணைய கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினரிடம் பிணையக்கைதியாக இருந்த அமெரிக்க-இஸ்ரேல் என இரட்டை குடியுரிமை கொண்ட ஓமர் நியூட்ரா என்பவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் அரசு அண்மையில் உறுதி செய்தது. அவரது உடல் ஹமாஸ் வசம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தங்களது பிடியில் இருந்த ஈடன் அலெக்சாண்டர் என்பவரின் வீடியோவை ஹமாஸ் இயக்கத்தினர் வெளியிட்டனர். இஸ்ரேல் ராணுவ வீரரான அவர், தம்மையும், தம்முடன் உள்ள இதர பிணைய கைதிகளையும் விடுவிக்க டிரம்ப் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரது முயற்சியின் விளைவாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடையே உடன்பாடு ஏற்பட்டதன் பேரில் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.