வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து உயர் கல்வி பயில்வதற்காகவும், வேலை தேடியும் பல மாணவர்கள் அமெரிக்க செல்கின்றனர். அப்படி செல்லும் இந்திய மாணவர்கள் இன ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாவதும், உடல்நல கோளாறு, விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
-
Deeply saddened by the unfortunate demise of Mr. Uma Satya Sai Gadde, an Indian student in Cleveland, Ohio.
— India in New York (@IndiainNewYork) April 5, 2024
Police investigation is underway. @IndiainNewYork continues to remain in touch with the family in India.
All possible assistance is being extended including to transport…
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் நகரில் இந்திய மாணவன் உமா சத்திய சாய் கன்டே இறந்துவிட்டதாகவும், அவரின் மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய துணைத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உள்ள இந்திய மாணவர் உமா சத்ய சாய் காடே மறைவு துரதிர்ஷ்டவசமானது அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கள் என தெரிவித்துள்ளனர்
மேலும் மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே போல் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அணைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக தூதகாரம் தெரிவித்துள்ளது.
4 மாதங்களில் 10 மரணங்கள்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த மாதம், மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில், இந்தியாவைச் சேர்ந்த 34 வயது கிளாசிக்கல் நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பர்டூ பல்கலைக்கழகத்தில் 23 வயதான இந்திய-அமெரிக்க மாணவர் சமீர் காமத், பிப்ரவரி 5 அன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அதே போல் பிப்ரவரி 2 அன்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ஐடி ஊழியர் விவேக் தனேஜா, வாஷிங்டனில் உள்ள ஓட்டலுக்கு வெளியே மர்ம நபர்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு(20) வயதான மாணவன் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிந்தார். இவ்வாறாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பர்களை கட்டிப்போட்டு கத்தி முனையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 3 வாலிபர்கள் போக்சோவில் கைது!