சனா : அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஏமன் பிரிவு தலைவர் காலித் அல் பதர்பி உயிரிழந்ததாக பயங்கரவாத அமைப்பு தெரிவித்து உள்ளது. காலித் அல் பதர்பி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து அறிவிப்பை வெளியிடாத அல் கொய்தா அமைப்பு அவரது சடலத்தின் கீது அல் கொய்தா மற்றும் வெள்ளை நிற கொடி போர்த்தியது போன்ற வீடியோவை வெளியிட்டு உள்ளது.
காலித் அல் பதர்பி தலைக்கு 5 மில்லியன் அமெரிக்கா டாலரை அமெரிக்க அரசு சன்மானமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 40 வயது மதிக்கத்தக்க அளவில் காலித் அல் பதர்பியின் வயது இருக்கக் கூடும் எனக் நம்பப்படும் நிலையில், என்ன காரணத்திற்காக அவர் உயிரிழந்தார் என்பது குறித்து அல் கொய்தா அமைப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
ரமலான் மாத நோன்பு ஆரம்பிக்க உள்ள நிலையில், சரியாக அதற்கு முன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் உண்மையான காரணம் குறித்த சந்தேகங்கள் கிளம்புவதாக கூறப்படுகிறது. மேலும், சாத் பின் அதெப் அல் அவ்லாகி இனி அல் கொய்தா ஏமன் குழுவின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாத் பின் அதெப் அல் அவ்லாகி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதன் மூலம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், சாத் பின் அதெப் அல் அவ்லாகியின் தலைக்கு 6 மில்லியன் டாலரை அமெரிக்க அரசு பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டனில் விமான மீது வெடிகுண்டு தாக்குதல் முயற்சி, அதன்பின் 2015ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள வார பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் என அல் கொய்தா ஏமன் அமைப்பால் பல்வேறு கொடூர தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "26 நாட்கள் எஸ்பிஐ வங்கி என்ன செய்தது?"- உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி! தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ மனு தள்ளுபடி!