ETV Bharat / health

சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன? எவ்வாறு பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? வடமாநிலங்களில் மீண்டும் தாக்கம்! - GUJARAT CHANDIPURA VIRUS

CHANDIPURA VIRUS: குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 4 குழந்தைகள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் அந்த வைரஸ் தொற்று சண்டிபுரா வைரஸாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) மாதிரிகளை அனுப்பிவைத்துள்ளனர்.

இரத்தம் உறிஞ்சும் கொசு (கோப்புப்படம்)
இரத்தம் உறிஞ்சும் கொசு (கோப்புப்படம்) (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 10:39 PM IST

சென்னை: குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மர்ம காய்ச்சல் காரணமாக 3 குழந்தைகளும், ராஜஸ்தானைச் சேர்ந்த 1 குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு காரணமான வைரஸ் தொற்று நோய் குறித்து மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர். இதற்கிடையே, ராஜஸ்தானைச் சேர்ந்த மேலும் 2 குழந்தைகளுக்கு அதேபோல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

மர்ம காய்ச்சலும் கிளம்பும் பீதியும்: இதனையடுத்து, இறந்த குழந்தைகளுக்கு எற்பட்ட அறிகுறிகள் பற்றி ஆய்வு செய்த குழந்தை மருத்துவர்கள், சண்டிபுரா வைரஸ் தொற்று அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 4 குழந்தைகளின் இரத்த மாதிரியும், சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகளின் இரத்த மாதிரியும் சேகரித்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவில்தான் அந்த குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டார்களா, இல்லை வேறு எதுவும் புதிய நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறதா எனத் தெரியவரும்.

சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன? இந்நிலையில், இந்த சண்டிபுரா வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, இந்த சண்டிபுரா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இவை கொசுக்கள், மணல் ஈக்கள் மற்றும் உண்ணி மூலம் பரவுபவையாகும். அவற்றுள் மணல் ஈக்கள் முக்கியமான பரவும் காரணியாக இருக்கிறது. இந்த வகையான ஈக்கள் மணல் கொண்டு கட்டப்பட்டிருக்கும் குடிசை வீடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

மீண்டும் விரையும் சண்டிபுரா வைரஸ்: இந்த சண்டிபுரா வைரஸ் தொற்று புதியவகை வைரஸ் அல்ல. ஏற்கனவே, 14 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைவிட முதன்முதலில் 1965ஆம் ஆண்டு மகாராஷ்டிரா, நாக்பூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள சில பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த 17 உயிர்களை பறித்துள்ளது.

ஆனால், இந்த வைரஸ் தொற்றை தவிர்க்கும் விதமாக மணல் ஈயை விரட்டும் பொருட்கள் வைத்து அவற்றை விரட்டிய நிலையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மலைக்கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிசை சுவர்கள் மற்றும் விரிசல்களில் இனப்பெருக்கம் செய்யும் மணல் ஈக்களை அழிக்க தூசி எடுத்தல் என்னும் முறையை பின்பற்றினர்.

சண்டிபுரா வைரஸ் அறிகுறிகள்: இந்த வகை வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் கடுமையான காய்ச்சல், வாந்தி, சுவாச பிரச்னை போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. அவ்வாறான சாதாரணமான நோய் பாதிப்புடன் தென்படுவதால் இந்த வைரஸ் நோய்த்தொற்றை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினமாகிறது. இதுமட்டுமின்றி, இந்த வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 8 முதல் 10 மணி நேரத்திற்குள் இறந்துவிட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதானல், இது பன்றிக் காய்ச்சலை விட கொடிய வைரஸாக கருதப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மூளையைத் தின்னும் அமீபா.. வழிகாட்டுதல்கள் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.