ETV Bharat / health

'குழந்தையின் முதல் 1000 நாட்களுக்கு கருவாடு அவசியம்'..ருசியாக இருக்கும் கருவாட்டில் இவ்வளவு நன்மைகளா? சர்வதேச ஆய்வு! - BENEFITS OF DRY FISH

மருத்துவ நன்மைகள் கொட்டிக்கிடக்கும் கருவாடு குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் என்றால் நம்ப முடிகிறதா? கருவாடு சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளயும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Dec 11, 2024, 12:38 PM IST

கருவாடு என்றதும் ஒருசிலர் முகம் சுழித்தாலும், பெரும்பாலானோர் வாயில் எச்சில் ஊற தொடங்கிவிடும். அதுவும், தமிழர்களின் உணவு கலாச்சாரத்தில் முக்கிய பங்கு கருவாடிற்கு இருக்கிறது என்றால் மிகையில்லை. வத்தல், ஊறுகாய் என உணவுப் பொருட்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் தமிழர்களின் உத்தியில் கருவாடு தயாரிப்பு முறையும் ஒன்று. மீன்களை வெளியில் காயவைத்து, நீர்ச்சத்து வற்றிய பின்னர் எஞ்சிய இறைச்சி பகுதியை கருவாடாக பயன்படுத்துகின்றனர்.

கருவாட்டின் வாடையும், சுவையும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்தாலும், கருவாடு பிரியர்களை கேட்டால் கம கம என மணக்கும் என்பார்கள். கருவாடு தனி சுவையை கொடுத்தாலும், ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்
குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் (CREDIT - PEXELS)

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி 12, டி புரதம், மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளையும் கொண்டுள்ளது.

கருவாடு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • கருவாட்டில் 80 முதல் 85% வரையில் புரதம் மட்டுமே இருப்பதால், இது புரதச்சத்திற்கு ஏற்ற உணவாக இருக்கிறது. கருவாட்டில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், முட்டையில் உள்ள அமினோ அமிலங்களுக்கு இணையான அமினோ அமிலங்கள் கருவாட்டில் உள்ளது.
  • கொடுவா, சுறா, மத்தி, நெத்திலி, நெய்மீன் போன்ற ஒவ்வொரு வகை கருவாடும் ஒவ்வொரு பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. கொடுவா கருவாடு சாப்பிடுவதன் மூலம், இரத்த சோகை, உடல் மெலிவி, உடல்பலவீனம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  • உடலில் நீர்ச்சத்து, இதயம், நரம்பு மண்டலம் மற்றும் தசை ஆகியவை சீராக செயல்படுவதற்கான பொட்டாசியம் சத்து கருவாட்டில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், எலும்புகளின் கட்டுமானம், பல் ஆரோக்கியம், டின்ஏ உருவாகத் அத்தியவசியமாக இருக்கும் பாஸ்பரஸ் சத்தும் கருவாட்டில் உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளை சீராக்குகிறது
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளை சீராக்குகிறது (Credit - GETTY IMAGES)
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சுறா கருவாடு மிகவும் நல்லது. நமது வீடுகளில், கர்ப்பிணிகள் அல்லது பால் கொடுக்கும் தாய்மார்கள் யாரேனும் இருந்தால் அடிக்கடி அவர்களுக்கு கருவாடுடன் பூண்டு சேர்த்து செய்யும் கருவாட்டு குழம்பு கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம், பால் சுறா பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கருவாடு கொண்டுள்ளதால் இவை, மூளை, இதயம், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளும் கருவாட்டில் உள்ளது.
கருவாடு சாப்பிட்ட பின் மோர், கீரை வகைகளை சாப்பிடக்கூடாது
கருவாடு சாப்பிட்ட பின் மோர், கீரை வகைகளை சாப்பிடக்கூடாது (CREDIT - FREEPIK)
  • NCBI இன் படி, உலர்ந்த மீன் (கருவாடு) ஒரு சத்தான உணவு எனவும் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முக்கியமான உணவாக இருக்கிறது என தெரிவித்துள்ளது. பால் கொடுக்கும் தாய்மார்கள் கருவாடு சாப்பிடும் போது குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.
  • வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை கருவாடு சாப்பிடுவதால், பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை, கருப்பை, நீர்ப்பை பிரச்சனைகள் சீராகும். ஆனால், சிலருக்கு கருவாடு சாப்பிட்டால் அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்படுவதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி கருவாடு எடுத்துக்கொள்ளலாம். அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையுடன் கருவாடு சாப்பிடலாம்.

கவனம் தேவை: கருவாடு சாப்பிட்டதும், அதனுடால் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள கூடாது. அதே போல, கீரை வகைகளையும் சாப்பிடக்கூடாது.

இதையும் படிங்க:

தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கிராமத்து ஸ்டைல் மொச்சை கருவாட்டு குழம்பு..இப்படி செஞ்சா சும்மா நறுக்குனு இருக்கும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.