ETV Bharat / health

கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்; சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு! - Chennai IIT

கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து செலுத்தும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பேராசிரியர் அருண் நரசிம்மன்
பேராசிரியர் அருண் நரசிம்மன் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 11:02 PM IST

சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், லேசர் மூலம் உருவாக்கப்படும் லேசான வெப்பச் சலனம் மூலம் மனிதக் கண்களில் செலுத்தப்படும் மருந்துகளை குறிப்பிட்ட பகுதிக்கு சிறந்த முறையில்
அனுப்பிவைக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

எந்த அளவுக்கு வெப்பம் மற்றும் நிறை பரிமாற்றம் நிகழ்கிறது என்பதைக் கண்டறிய, மனிதக் கண்ணின் பல்வேறு சிகிச்சை முறைகளின் செயல்திறனை கணினித் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தனர்.

இந்தியாவில் சுமார் 11 மில்லியன் நபர்கள் விழித்திரை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கண் நோய்களுக்கான லேசர் அடிப்படையிலான சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன.

விழித்திரை கிழிதல் (retinal tears), நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinography), விழித்திரையில் வீக்கம் (macular oedema), விழித்திரை நரம்பு அடைப்பு (retinal vein occlusion) போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க லேசர் அடிப்படையிலான விழித்திரை சிகிச்சைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகினறன. விழித்திரை என்பது ரத்த நாளங்கள் மற்றும்நரம்புகளைக் கொண்ட கண்களின் ஒரு பகுதி என்பதால், இதுபோன்ற சிகிச்சை முறைகளை மிக கவனமாகவும் துல்லியமாகவும் கையாளுதல் அவசியமாகும்.

சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் அருண் நரசிம்மன், சங்கர நேத்ராலயா டாக்டர் லிங்கம் கோபால் ஆகியோர் இணைந்து, லேசர் கதிர்வீச்சால் விழித்திரையில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிய இந்தியாவிலேயே முதன்முறையாக பயோதெர்மல் ஆராய்ச்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு
தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, உயிரிவெப்பம் மற்றும் நிறை பரிமாற்றத்தைக் கண்டறிந்து கண் சிகிச்சைக்கான பல்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக கணினித் தொழில்நுட்பத் தரவுகளை சேகரித்தல் மற்றும் பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.

சென்னை ஐஐடியில் கண்ணாடியால் ஆன கண்ணைப் பயன்படுத்தி இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். வெப்பத்தால் தூண்டப்பட்ட வெப்பச்சலனம் காரணமாக, கண்ணாடிப் பகுதியில் செலுத்தப்படும்
மருந்து விழித்திரையில் உள்ள இலக்குப் பகுதியை செனறடைய எடுத்துக் கொள்ளும் கால
அளவு எந்த அளவுக்குக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டது.

இதற்கான ஆராய்ச்சி விவரங்கள் ஸ்பிரிங்கர் வெர்லாக் வெளியிட்டுள்ள சிறப்பு ICCHMT
மாநாட்டுக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஆய்வின் கண்டுபிடிப்புகள்
மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்வரும் இணைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. Wiley Heat Transfer
journal (https://doi.org/10.1002/htj.22899).

சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அருண் நரசிம்மன் கூறும்போது, "பொறியியல், உயிரியல் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் நிபுணத்துவத்தை பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைக்கின்றன. இதன் மூலம் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வுகாண முடியும். எங்களைப் போன்ற பொறியாளர்கள் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும்போது நடைமுறை மற்றும் நெறிமுறை சிக்கல்கள் காரணமாக இயக்கத்தில் உள்ள மனித உறுப்புகள் கிடைப்பது கடினம். அதனால் கணினித் தொழில்நுட்ப தரவுகளைப் பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான பரிசோதனைக்கு கருவிகளை மட்டுமே உபயோகித்து வருகிறோம்.

கண்ணாடியால் ஆன கண் பரிசோதனைகள், உயிரிவெப்ப மாறுபாடுகளைப் பயன்படுத்தி மனிதக்
கண்ணில் ஊடுருவும் சிகிச்சைக்கான பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம் விழித்திரைக்கு மருந்து செலுத்தப்படுவதை மேம்படுத்த முடியும் என நிரூபித்துள்ளோம். மருத்துவ சமூகம் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று விழித்திரை நோய்களுக்கான சிகிச்சையில் செயல்படுத்த
வேண்டும்" என்று அருண் நரசிம்மமன் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் ஷிரின்வாஸ் விபூதே கூறும்போது, "இயற்கையான பரவல் மூலமாக விழித்திரையின் இலக்குப் பகுதியில் மருந்து திறம்பட செறிவை அடைவதற்கு 12 மணிநேரம் எடுத்துக் கொண்டது. ஆனால், கண்ணாடி திரவத்தை வெறும் 12 நிமிடங்களில் வெப்பமாக்கியது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.