ETV Bharat / health

குழந்தைபேறு இல்லாத தம்பதியினர் அனைவருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை தேவையா? -மருத்துவர்கள் சொல்வது என்ன? - MGM VARAM IVF - MGM VARAM IVF

MGM VARAM IVF: தாமதமாக திருமணம் செய்வது, உடல் பருமன் போன்றவை குழந்தையின்மைக்கு காரணம் என்கின்றனர் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள். அதேபோல்,வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் குழந்தையின்மை பிரச்சனையை தவிர்க்கலாம் எனவும் குழந்தைபேறு இல்லாத தம்பதியினர் அனைவருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை தேவையில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 9:05 PM IST

Updated : Sep 16, 2024, 11:03 PM IST

சென்னை: உலகளவில் பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் காலதாமதம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மருத்துவம் அளிப்பது போல் ஐவிஎஃப்(IVF) சிகிச்சை மையங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், குழந்தையின்மை பிரச்சனைக்கு அனைவருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையில்லை எனவும், திருமணம் முடிந்தப் பின்னர் ஒராண்டு கடந்தப் பின்னரும் குழந்தையின்மை இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் குழந்தைப் பிறக்க வாய்ப்புள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனையின் வரம் ஐவிஎஃப் (Varam IVF) மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர், புறக்கருக்கட்டல் சேவைகள் (IVF) பிரிவை துவக்கியது. இந்த புதிய வரம் ஐ.வி.எஃப் (Varam IVF) மையம், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்பட்ட கருவாக்க, கருவள சிகிச்சைகளையும் மற்றும் பிரத்யேக பராமரிப்பு சேவைகளை வழங்க உள்ளது. இந்த ஐ.வி.எப் மையத்தில் நோயறிதலுக்கான மதிப்பாய்வுகளிலிருந்து கருமுட்டை, விந்து சேமிப்பு வரை சிகிச்சைகளின் முழுத்தொகுப்பை உள்ளடக்கியது.

இந்த மையத்தில்,

  • கருப்பை தூண்டல்
  • கருப்பையில் கருவூட்டல் (IUI)
  • புறக்கருக்கட்டல் (IVF)
  • இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி (ICSI)
  • குளிரூட்டுக்கருவி லேசர் உதவியுடன் அடைமுட்டைகள் உள்வைப்புக்கு முந்தைய மரபணு சோதனை (PGT)
  • கரு உறையவைத்தல்
  • கரு மாற்றுகை
  • உறைய வைக்கப்பட்ட கரு மாற்றுகைகள் (FET)
  • இளம்கருவளர் பருவ செயல்பாடு
  • CGH - ஐ பயன்படுத்தும் கருத்தரித்தல் புராடக்ட்கள் (POC)
  • ஆணுறுப்பு சேவைகள்
  • மைக்ரோ எபிடிடைமல் விந்தணு ஆஸ்பிரேஷன் (MESA)
  • பெர்குடேனியஸ் எபிடிடிமல் ஸ்பெர்ம் ஆஸ்பிரேஷன் (PESA)
  • மைக்ரோ டெஸ்டிகுலர் ஸ்பெர்ம் பிரித்தெடுப்பு (Micro-TESE)
  • நுண்ணிய ஊசியின் மூலம் உறிஞ்சியெடுத்தல் (FNA)
  • ஆண்களுக்கான கருவள சேமிப்பு – விந்தணு உறையவைப்பு (கிரையோபிரெசர்வேஷன்)
  • பெண்களுக்கான கருவள சேமிப்பு - புற்றுநோயாளிகளுக்கு தாய்முட்டை உறையவைப்பு ஆகியவை செய்யப்பட உள்ளது.

இதனை, எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இயக்குநர் உர்ஜிதா ராஜகோபாலன் , எம்ஜிஎம் வரம் ஐவிஎஃப் மையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, எம்ஜிஎம் ஹெல்த்கேர் வரம் ஐ.வி.எப் இயக்குநர் தாட்சாயிணி , மகப்பேறு, மகளிர் மருத்துவம் மற்றும் கருவுறுதல் நிபுணர் வனிதா ஸ்ரீ ஆகியோர் கூறும்போது, "மலட்டுத்தன்மை மற்றும் கருவுற இயலாமையின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.

10-15 சதவீதம் தம்பதியரை இது பாதிப்பதால், விரிவான ஐ.வி.எப் சேவைகளுக்கான தேவை முன்பு எப்போதையும் விட இப்போது அதிகரிக்க துவங்கி உள்ளது. தற்காலத்தில் திருமணத்திற்கு பின்னர் ஆண், பெண்கள் அதிகளவில் இரவு நேரங்களில் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் குறிப்பிட்ட நேரம் தூங்காமல் இருப்பதால் குழந்தைப் பேறு உருவாக்கும் ஹார்மோன்கள் உற்பத்தி குறைகிறது.

குழந்தையின்மை காரணம்:

  • தாமதமாக திருமணம் செய்வது
  • உணவுப்பழக்கத்தில் மாற்றம்
  • உடற்பயிற்சியின்மை
  • உடல் பருமன்
  • ஹார்மோன் குறைபாடு

இது போன்ற பிரச்சனைகளுக்கு தேவையான ஆலோசனை வழங்கினால் சரிசெய்ய முடியும். ஆனால் 30 வயதிற்குள் உள்ள ஆண், பெண் குழந்தைப் பேறுக்கான சிகிச்சை அளித்தால் போதுமானது. வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனையை தவிர்க்கலாம். குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்களும் காரணமாக அமைகின்றனர்.

எனவே திருமணம் முடிந்து ஒராண்டுகள் இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்தும் குழந்தையின்மை இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். ஐயுஐ, ஐ.வி.எஃப் மற்றும் ஆண் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைகள் போன்ற முக்கிய செயல்முறைகளுக்கும் கூடுதலாக உதவப்படும் கருமுட்டைப் பொறித்தல், இளம்கருவளர் பருவ செயல்பாடு மற்றும் முட்டைகளையும், வளர்கருக்களையும் உறையவைத்தல் போன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளையும் வரம் ஐ.வி.எப் வழங்குகிறது.

சிறந்த உருவவியல் திறன் கொண்ட விந்தணு செல்களை தேர்வு செய்வதற்கு அதிக ஆற்றல் கொண்ட நுண்ணோக்கியைப் பயன்படுத்தி கருமுட்டைகள் வளர்ச்சியை மேற்கொள்கின்ற இக்சி போன்ற அதிநவீன சிகிச்சை உத்திகளையும் இம்மையம் பயன்படுத்துகிறது. குழந்தையின்மை பிரச்சனைக்கு வரும் அனைவருக்கும் ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. முதலில் சில சிகிச்சைகளை அளித்தப் பின்னர், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளித்தால் போதுமானது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மனநல பிரச்னைகளா? - ஆய்வு கூறுவது என்ன?

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Sep 16, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.