ETV Bharat / health

அயோர்டிக் அனியுரிசத்தால் இவ்வளவு ஆபத்தா? மருத்துவர் சொல்வதை கேளுங்க! - Know About Aortic Aneurysm - KNOW ABOUT AORTIC ANEURYSM

80 முதல் 90 சதவீதம் பேருக்கு அயோர்டிக் அனியுரிசம், ரத்த நாளத்தில் திடீரென வெடிப்பு அல்லது கசிவு ஏற்படுத்தும். பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு வர இயலாது. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் இறக்க நேரிடலாம். எனவே, இத்தகைய ஆபத்து இருப்பதால் அயோர்டா-வின் அளவு 5.5 செ.மீ.-க்கும் அதிகமாக உள்ள ஆண்களும், 5 செ.மீ.-க்கு அதிகமாக உள்ள பெண்களும் உடனடியாக சிகிச்சை பெற்றாக வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர் தீபஸ்ரீ
நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர் தீபஸ்ரீ (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 9:29 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் நேற்றிரவு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் (aorta) இருப்பது கண்டறியப்பட்டு அறுவைச் சிகிச்சை இல்லாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை அளித்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோர்டிக் அனியுரிசம்

இந்நிலையில் 'அயோர்டிக் அனியுரிசம்' என சொல்லக்கூடிய ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம், அதன் அறிகுறி, அதனால் ஏற்படும் ஆபத்து போன்றவை குறித்து சென்னை ரேலா மருத்துவமனையின் கதிரியக்க நிபுணரான (interventional radiologist) மருத்துவர் தீபாஸ்ரீ கூறியதாவது:

அயோர்டிக் அனியுரிசம் (Aortic aneurysm) என்பது குறித்து முதலில் அறிந்துகொள்வோம். அதற்கு முன்பாக அயோர்டா (aorta) என்பது குறித்து அறிந்து கொள்வோம். அயோர்டா என்பது நமது இதயத்திலிருந்து மத்த உறுப்புகளுக்கு செல்லும் ரத்த நாளங்கள். ரத்தக்குழாய் வீக்கம் அனியுரிசம் என அழைக்கப்படுகிறது. அயோர்டா-வின் அளவு (சைஸ்) 1.5 செ.மீ. முதல் 2 செ.மீ. வரை இருக்கலாம். அதற்கு மேல் இருப்பதை வீக்கம் (dilated) மருத்துவ பெயரில் சொல்கிறோம். இதுவே 3 செ.மீ.-க்கும் மேல் இருந்தால் அதனை அயோர்டிக் அனியுரிசம் என சொல்கின்றனர்.

'அயோர்டிக் அனியுரிசம்' குறித்து விளக்கும் மருத்துவர் தீபாஸ்ரீ (Credits - ETV Bharat Tamilnadu)

அறிகுறி என்ன?

அயோர்டிக் அனியுரிசம் பொதுவாக 40 சதவீதம் அறிகுறியே இருக்காது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாது. முழு உடற் பரிசோதனை அல்லது வயிற்று பரிசோதனை (ultrasound abdomen scan) செய்தால் அதன் மூலம் தான் இந்த பாதிப்பை கண்டறிய முடிகிறது.

சிலருக்கு அறிகுறி இருப்பதை உணர முடியும். அதாவது, லேசான வயிற்று வலி அல்லது வயிற்றுப் பகுதியில் கைவைக்கும்போது துடிப்பது அல்லது அதிர்வு போன்று உணர்ந்தாலும் அயோர்டிக் அனியுரிசம் அறிகுறியாக இருக்கலாம்.

யாருக்கு இந்த பாதிப்பு வரும்?

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், இதய நோய் உள்ளவர்கள், இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளவர்கள், காலுக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம். இதுதவிர மரபு ரீதியாகவும் இத்தகைய அயோர்டிக் அனியுரிசம் வரலாம். இது பெண்களை காட்டிலும் ஆண்களையே (விகிதம் - 8:1) அதிகம் பாதிக்கிறது.

சிகிச்சை முறைகள்

அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக நிறைய பேருக்கு பயம் ஏற்படுவது இயல்பு. அயோர்டிக் அனியுரிசம் பொருத்தவரை எல்லோருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்களுக்கு 5.5 செ.மீ.-க்கும் கூடுதலாகவும், பெண்களுக்கு 5 செ.மீ.-க்கும் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக இப்பிரச்னைக்கு சிகிச்சை பெற்றே ஆக வேண்டும்.

ஏனெனில் 80 முதல் 90 சதவீதம் பேருக்கு அயோர்டிக் அனியுரிசம் திடீரென வெடிப்பு அல்லது கசிவு ஏற்படும். பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு வர இயலாது. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் இறக்க நேரிடலாம். எனவே, இத்தகைய ஆபத்து இருப்பதால் அயோர்டா-வின் அளவு 5.5 செ.மீ.-க்கும் அதிகமாக உள்ள ஆண்களும், 5 செ.மீ.-க்கு அதிகமாக உள்ள பெண்களும் உடனடியாக சிகிச்சை பெற்றாக வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

இதையும் படிங்க: உங்கள் வீடு/கடைகளில் உள்ள எலிகளை விரட்ட எருக்கன் செடி போதும்..இப்படி பயன்படுத்தி பாருங்க..!

இதில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சை. மற்றொன்று 'இவார்' (evar) எனப்படும் 'என்டோவாஸ்குலர் அனியுரிசம் ரிப்பேர்' (Endovascular aneurysm repair). அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 'இவார்' என்பது அறுவை சிகிச்சை இல்லாத ஒரு சிகிச்சை முறையாகும். இது நமது இதயத்தில் ஓர் அடைப்பு இருந்தால் எப்படி ஓர் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து ஸ்டண்ட் பொருத்துகிறார்களோ, அதேபோன்றுதான்.

வயிற்று ரத்த நாள வீக்கம் (abdominal aortic aneurysm) மற்றும் Thoracic aortic aneurysm என சொல்லக்கூடிய மார்பு பகுதி ரத்த நாள வீக்கம் ஆகிய இரண்டிற்குமே கதிரியக்க நுட்பங்கள் (interventional radiology techniques) மூலமாக ஒரு ஸ்டண்ட்-ஐ அதற்குள் பொருத்தும்போது அது முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஸ்டண்ட் பொருத்துவதன் மூலம் வீக்கத்தின் அளவும் சரியாக கொண்டுவரப்படுகிறது. இதுதான் சிகிச்சை முறை. இது மிகவும் முக்கியமான விஷயம். அயோர்டிக் அனியுரிசம் மற்றும் இதன் சிகிச்சை முறைகள் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே தான் இந்தத் தகவலை தெரியப்படுத்துகிறேன் என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.