ETV Bharat / health

இந்த 6 பழக்கத்தை விட்டால் போதும்.. புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி? - Tips to Prevent Cancer - TIPS TO PREVENT CANCER

Tips to Prevent Cancer: புகைப்பிடித்தலை தவிர்ப்பதன் மூலமும், உடல் எடையை சரியாக பராமரிப்பதன் மூலமும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

FILE IMAGE
FILE IMAGE (CREDIT - ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 20, 2024, 3:20 PM IST

Updated : Aug 20, 2024, 5:30 PM IST

சென்னை: உலக அளவில் அச்சுறுத்தி வரும் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்யத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கை முறையில் இந்த ஆறு விஷயங்களை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறது லண்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு.

புற்றுநோயைத் தடுக்க முடியுமா?: ஒரு நபருக்கு பல்வேறு காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆரோக்கியமான மாற்றங்களால் புற்றுநோயால் வரும் ஆபத்தை குறைக்க முடியுமே தவிர, தடுக்க முடியாது. வயது முதிர்வு மற்றும் ஓருவரின் குடும்ப ஆரோக்கியப் பின்னணியைப் பொறுத்து தனிநபருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

நோ டூ ஸ்மோக்கிங்: புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று நினைத்தால் முதலில் நிறுத்த வேண்டிய பழக்கம் புகைப்பிடித்தல் தான். புகையிலையில் இருக்கும் நச்சுக்கள் நுரையீரலை நேரடியாக பாதிப்பது மட்டுமல்லாமல், மொத்த உடலையும் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பாதிக்கிறது. உங்கள் உடலுக்கு நீங்கள் நல்லது செய்ய நினைத்தால், முதலில் கைவிட வேண்டியது புகைப்பழக்கத்தை தான்.

உடல் எடையில் கவனம்: ஆரோக்கியமான உடல் எடையுடன் இருப்பது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த வாழ்க்கைச் சூழலில் உடல் எடையை பராமரிப்பது கடினமாக இருக்கக்கூடும். இருப்பினும், உணவு முறைகளில் கவனம் செலுத்தி உடல் எடையை பாரமரிக்க வேண்டிய அவசியம் முக்கியமானது.

சத்தான உணவுகளை உண்ணுங்கள்: ஆரோக்கியமான உணவுப் பழக்கம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் தானிய வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கலோரி கொண்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சிகள் மற்றும் மதுபானங்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளியில் மருந்து: தினமும் போதுமான அளவு சூரிய ஒளி பெறுவதன் மூலம் தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால், அதேநேரம் யூ வி ரேடியேஷன் சரும பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. இதற்காக சன்ஸ்கீரின், முழு அளவு சட்டைகளை பயன்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறனர்.

குடி பழக்கத்தை தவிர்க்கவும்: மதுப் பழக்கத்தை விடுவதால் 7 வகையான புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர். அதிகப்படியான ஆல்கஹால் எடுத்துக் கொள்வது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து, புற்றுநோய் உள்ளிட்ட நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது.

HVP தடுப்பூசி அவசியம்: 11 முதல் 13 வயதில் உள்ள குழந்தைகளுக்கு போடக்கூடிய ஹெபடைடிஸ் பி தடுப்பூசி நோய்த் தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும், இந்த தடுப்பூசி சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?..உடனே தெரிஞ்சுக்கோங்க! - Drinking water in empty stomach

Last Updated : Aug 20, 2024, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.