ETV Bharat / entertainment

மூணாறில் கேஷ்வலாக ஜாக்கிங் சென்ற விஜய் தேவரகொண்டா... வீடியோ இணையத்தில் வைரல்! - VIJAY DEVARAKONDA

Vijay devarakonda: நடிகர் விஜய் தேவரகொண்டா மூணார் தேயிலை தோட்ட மலைப்பகுதியில் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மூணாறில் ஜாக்கிங் சென்ற விஜய் தேவரகொண்டா
மூணாறில் ஜாக்கிங் சென்ற விஜய் தேவரகொண்டா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 14, 2024, 1:02 PM IST

தேனி: தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தென்னிந்திய அளவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுபவர். இவர் தற்போது கவுதம் தின்னூரி இயக்கத்தில் 'VD12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முடிவடைந்தது. இப்படத்தில் தலைப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது 'VD12' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா மாநிலம் மூணாறில் முகாமிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, அங்கு காலையில் தேயிலை தோட்ட மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் ஜாக்கிங் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நடந்து கொண்ட விஜய் சேதுபதி... போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர்!

விஜய் தேவரகொண்டா ஜாக்கிங் செல்லும் போது அங்குள்ள வன காவலர்கள் மற்றும் சில ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா கடைசியாக பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 AD’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.