சென்னை: பிக்பாஸ் வீட்டில் சவுந்தர்யா மற்றும் ஜாக்குலினை சுனிதா கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி தற்போது 90 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடைசியாக பிக்பாஸ் வீட்டின் எலிமினேஷனில் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 நபர்களே உள்ள நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் நாக் அவுட் சுற்று வைக்கப்பட்டது. இந்த சுற்றில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய ரவீந்தர், சுனிதா, ஆர்னவ், சாச்சனா வர்ஷினி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
#Day95 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 9, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/YE9grAzoV3
இந்நிலையில் இன்று (ஜன.09) பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் சுற்றில் வந்துள்ள 8 பேரில் இருந்து தற்போதுள்ள போட்டியாளர்களுக்கு மாற்றாக 2 தகுதியானவர்களை கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளார். அதேபோல் டாப் 8 போட்டியாளர்கள் மத்தியில் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற 2 பேரை பிக்பாஸ் கூறச் சொன்னார்.
#Day95 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 9, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/A4b0BR6opl
அப்போது சுனிதா, ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யாவை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். சுனிதா, மற்ற போட்டியாளர்கள் இந்த வீட்டில் பிக்பாஸ் விளையாடுகின்றனர் எனவும், சவுந்தர்யா வீட்டின் வெளியே பிக்பாஸ் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார். நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சவுந்தர்யா கஷ்டப்படுகிற பெண் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படி எல்லாம் கஷ்டப்படவில்லை. அவர் இந்த வீட்டில் தனது இயல்பில் இல்லை.
இதையும் படிங்க: மதகஜராஜா போல பல ஆண்டுகள் வெளியாகாமல் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா? - UNRELEASED TAMIL MOVIES
ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா இருவரும் இந்த வீட்டில் உண்மையாக இல்லை என கூறினார். இதனையடுத்து சவுந்தர்யா கதறி அழுதார். அவரை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ் சமாதானம் செய்தார். உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சவுந்தர்யாவிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறி அடுத்து டான்ஸ் டாஸ்கில் கவனம் செலுத்துமாறு கூறினார். சுனிதா சவுந்தர்யாவை கடுமையாக விமர்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.