ETV Bharat / entertainment

தக் லைஃப் படத்தில் இருந்து இரு முன்னணி நட்சத்திரங்கள் விலகலா? வெளியான அதிர்ச்சி தகவல்! - Thug Life movie update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 10:36 PM IST

Thug Life star cast: மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெளியாகும்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நாளடைவில் படத்தில் இருக்கும் சிறப்புகள் ரசிகர்களை படத்தைக் கொண்டாட வைத்துவிடும்.

இவரது இயக்கத்தில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, படத்தின் வசனங்கள், இசை, ஒளிப்பதிவு ஆகியவை ரசிகர்கள் படத்தை கொண்டாடும்படிச் செய்தது.

இதனிடையே, இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசனை வைத்து "தக் லைஃப்" என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாக உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃப்லிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் "நாயகன்" படத்திற்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளது.

இது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்க இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் பிஸியாக இருப்பதால், படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இதனால் ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தக் லைஃப் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், துல்கர் சல்மானும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து விலகுகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விடுதலை இரண்டாம் பாகம் எப்போது? - வெற்றிமாறன் பிரத்யேக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.