ETV Bharat / entertainment

பிரபல தொழிலதிபரை மணக்கிறாரா நடிகை திவ்யா ஸ்பந்தனா? - divya spandana - DIVYA SPANDANA

Divya spandana: நடிகை திவ்யா ஸ்பந்தனாவிற்கு நிச்சயதார்த்தம் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது பொய்யான தகவல் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை திவ்யா ஸ்பந்தனா
நடிகை திவ்யா ஸ்பந்தனா (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 8:27 PM IST

ஹைதராபாத்: பொல்லாதவன், குத்து, சிங்கம் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் ரம்யா என்ற பெயரில் சினிமாவில் அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் பிரபல நடிகையான திவ்யா ஸ்பந்தனாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிரபவ் சவுத்ரியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

இதனைத்தொடர்ந்து நமது ஈடிவி செய்தியாளர், திவ்யாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, அது பொய்யான தகவல் என தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, 'திவ்யாவுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் என்பது வதந்தி என்பது தெரியவந்தது. திவ்யா குறித்து வெளியான தகவலில், அவருக்கு தொழிலதிபர் பிரபவ் சவுத்ரியுடன் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அது முற்றிலும் பொய்யான தகவல்' என தெரிவித்தனர்.

கன்னட, தமிழ் சினிமாவில் ரம்யா என்ற பெயரில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக hostel boys wanted என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் Swati Muthina Prem Haniye என்ற படத்தை தயாரித்துள்ளார். ரம்யா எப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அவரது சொந்த வாழ்க்கை பற்றி அறியவும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விஜய் மகன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம்; ஹீரோ யார் தெரியுமா? - Sundeep kishan with jason sanjay

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.