ETV Bharat / entertainment

ஓட்டு போட வராதது முதல் ரெட் கார்ட் வரை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு! - Silambarasan TR

Actor Simbu: இந்தியன் 2 பட விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் இருந்ததால் ஓட்டு போட வரமுடியவில்லை எனவும், ரெட் கார்டு பிரச்சினையை பேசி சரிசெய்துவிட்டாச்சு என்றும் தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு (Credits - Simbu X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 12:08 PM IST

சென்னை: லைக்கா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமான 'இந்தியன் 2' ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் பா.விஜய் வரிகளில் உருவான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக ஜூன் 1-இல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், நடிகைகள் அதிதி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்ததால் நடிகர் சிம்பு தாமதமாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிம்பு, “தக் லைஃப் படத்தில் கமலுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதை முடித்துவிட்டுதான் இங்கு வந்தேன். இந்தியன் 2 படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். பான் இந்தியா படம் எப்போது உங்களிடம் எதிர்பார்க்கலாம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ்டிஆர் 48 மற்றும் தக் லைஃப் வரும் என்றார்.

உடம்புதான் முக்கியம் என்று மேடையில் பேசியது ஏன் என்ற கேள்விக்கு, “எல்லோருக்கும் வாழ்க்கையில் அது நடக்கும் என்று நினைக்கிறேன். நேரம் தான் அதுக்கு காரணம். இந்த உலகத்தில் ரொம்ப கஷ்டப்படுபவர் உண்மையைப் பேசுபவர்கள் தான். நான் நிறைய பேசி இருக்கேன்” என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் அவர், “நம் உடன் இருப்பவர்கள் நம்மை விட்டு போய் விடுவார்கள். கூடவே இருப்பது உடம்பு மட்டும் தான். உடம்பை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். உடம்பை விட்டுவிடாதீர்கள், பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு போடாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “படப்பிடிப்பில் இருந்தேன் வரமுடியவில்லை. கண்டிப்பாக அது ஒரு தவறான விஷயம் தான். படப்பிடிப்பு ரத்து செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அதையும் பார்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும் வரவில்லை என்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. எனக்கு ரெட் கார்டு என்று வெளியில் செய்தி வருகிறது. சின்ன பிரச்சினைகள் இருந்தது. அதையும் பேசி சரிசெய்துவிட்டாச்சு. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு தற்காலிகமாக ‘எஸ்டிஆர் 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்! - Aranmanai 4 OTT Release

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.