ETV Bharat / entertainment

மீண்டும் ஆக்‌ஷன் அவதாரத்தில் களமிறங்கிய அனுஷ்கா...’காதி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

Ghaati movie glimpse video: நடிகை அனுஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு, கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள காதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

காதி திரைப்பட போஸ்டர்
காதி திரைப்பட போஸ்டர் (Credits - Film poster)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 5:33 PM IST

சென்னை: நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ’காதி’ (Ghaati) படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் பெண்களை மையமாக கொண்டு தற்போது பல்வேறு படங்கள் வெளி வருகிறது. ஆனால் தனது திரை வாழ்வில் ஆரம்ப கட்டத்திலேயே பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட படத்தில் நடித்து பெயர் பெற்றவர் அனுஷ்கா. இவர் நடித்த அருந்ததி திரைப்படம் தென் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ரஜினி, விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலக குயின் என அழைக்கப்படும் அனுஷ்கா நடிப்பில் தற்போது காதி என்ற படம் உருவாகி உள்ளது. கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் (தமிழில் வானம்) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இணையும் திரைப்படம் இதுவாகும். அனுஷ்காவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பொட்டு வைத்து பயங்கரமாக காட்சி அளிக்கிறார். மேலும் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அனுஷ்கா ஒருவரை கொடூரமாக கொலை செய்து தலையை கையில் எடுத்து வருகிறார். மேலும் அனுஷ்கா சுருட்டு பிடிக்கும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக இயக்குநர் கிரிஷ் இதில் காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணம்!

இப்படத்தற்கு மனோஜ் ரெட்டி கடசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குநராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரத்தில் பிரமாண்டமான திரைப்படமாக காதி உருவாகிறது. காதி பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.