ஹைதராபாத்: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், ‘அன்னபூரணி’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரெய்டண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அன்னபூரணி படத்தை தயாரித்தது. மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லீ, கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்களை பெற்ற அன்னபூரணி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், அன்னபூரணி படத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நயன்தாராவின் அன்னபூரணி கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டு, அவர் அசைவ உணவுகள் சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனையடுத்து பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாகக் கூறி மும்பை, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அன்னபூரணி படக்குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது. மேலும் நடிகை நயன்தாரா எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் அன்னபூரணி திரைப்படம் எடுக்கவில்லை என மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அன்னபூரணி திரைப்படம் simply south என்ற ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் மட்டுமே இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அன்னபூரணி திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்து எந்த தகவலும் வெளியாக்வில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'அவெஞ்சர்ஸ்' படத்திற்காக பிரமாண்ட ஹாலிவுட் இயக்குநருடன் இணையும் தனுஷ்? - Dhanush in avengers movie