ETV Bharat / entertainment

கமல்ஹாசன் எழுத்தில் 'இனிமேல்': நடிகராகிறாரா இயக்குநர் லோகேஷ் கனகராஜ்? - inimel album song update

Inimel album song: நடிகர் கமல்ஹாசன் எழுதி, நடிகர் ஸ்ருதி ஹாசன் இசை அமைத்து இயக்குநர் லோகேஷ் அறிமுகமாக உள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.

inimel album song
inimel album song
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 8:03 PM IST

சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கமல்ஹாசன் திரை வாழ்வில் அதிகபட்ச வசூல் செய்த படமாக இது மாறியது. இதனால், லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இடையே நட்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் கனகராஜ் நிற்கும் புகைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. லோகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார் போன்ற செய்திகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடல் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ஸ்ருதிஹாசன் இசை அமைத்துள்ளார். மேலும், அறிமுகம் லோகேஷ் கனகராஜ் என்று அறிவித்துள்ளனர். இதனால், இப்பாடலில் லோகேஷ் கனகராஜ் தோன்றப் போகிறார் என தெரிகிறது.

இதுகுறித்து அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே ஒரு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆல்பம் பாடல்களுக்கும் இசை அமைத்துப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குட் பேட் அக்லி; அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.