ETV Bharat / entertainment

ஓவியா அம்மனாக நடிக்கும் சேவியர் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! - SAVIOR FIRST LOOK POSTER OUT NOW

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் நடிகை ஓவியா இணைந்து நடிக்கும் சேவியர் (savior) படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சேவியர் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்
சேவியர் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் (credits - harbhajan singh X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 10:02 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் களவானி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டார். கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியா தற்போது சேவியர் (Savior) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் ஓவியாவுக்கு, ஜோடியாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இதில், விடிவி கனேஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை seantoa studio- நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க : "என்னுடைய முதல் ஹீரோ எங்க அப்பா" - எமோஷ்னலான சிவகார்த்திகேயன்!

மேலும், படக்குழு வெளியிட்டுள்ள ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகை ஓவியா அம்மனாக வர்னா கதாபாத்திரத்திலும், நடிகர் ஹர்பஜன் சிங் டாக்டராக ஜேம்ஸ் மல்ஹோத்ரா கதாபாத்திரத்திலும், ஜிபி முத்து முத்து மாமா கதாபாத்திரத்திலும், விடிவி கனேஷ் கட்டப்பாரா கனேஷன் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழில் கடந்த 2020ம் ஆண்டு ஹர்பஜன் சிங் 'திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்' என்ற வெப் சீரிஸிலும், பிரண்ட்ஷிப் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.