ETV Bharat / entertainment

ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் டாடா பட இயக்குநர்! - Jayam ravi 34 - JAYAM RAVI 34

Jayam ravi 34: நடிகர் ஜெயம் ரவியின் 34வது படத்தை டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்குகிறார்.

ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் டாடா பட இயக்குநர்
ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் டாடா பட இயக்குநர் (Credits - @Screensceneoffl X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 5, 2024, 12:56 PM IST

சென்னை: பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் இயக்குநர் கணேஷ் பாபு படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ’பிரதர்’ (Brother) திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில், ’மக்காமிஷி’ பாடல் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினியின் உடல் நிலையை மீறி படப்பிடிப்பா? - லோகேஷ் பதில்! - Lokesh Kanagaraj

டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் பாபு. டாடா படத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது கணேஷ் பாபு இயக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் சமூக பிரச்சனையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.