ETV Bharat / entertainment

தன்னைத் தானே நாமினேட் செய்த ரஞ்சித், ஜாக்குலினை வம்பிழுக்கும் சுனிதா... களைகட்டும் பிக்பாஸ் வீடு!

Bigg Boss season 8: பிக்பாஸ் சீசன் 8இல் 4 நாளில் ரஞ்சித் தன்னைத் தானே நாமினேட் செய்து கொண்டது, ஜாக்குலினை பற்றி அன்ஷிதாவிடம் சுனிதா புரணி பேசியது என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது

author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 11, 2024, 1:11 PM IST

விஜய் சேதுபதி, பிக்பாஸ் சுனிதா
விஜய் சேதுபதி, பிக்பாஸ் சுனிதா (Credits - vijay television x page, ETV Bharat Tamil Nadu)

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி 4 நாட்கள் ஆன நிலையில், தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் ஆரம்ப நாளிலேயே வீட்டை ஆண்கள், பெண்கள் என பிரித்தார். அதன் காரணமாக வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் போனது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை நிருபிக்கவும், இந்த வார எலிமினேஷனில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் பல்வேறு விதமாக கண்டெண்ட் வழங்கி வருகின்றனர்.

பெண்கள் அணியில் இருக்கும் முத்துக்குமரன் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்க முந்திக் கொள்வதாக அந்த அணியில் உள்ளவர்களே தலைவரிடம் புகார் கூறுகின்றனர். ரஞ்சித் மற்றும் ரவீந்தர் ஆகியோர் பேசி வைத்து சண்டை போட்டு கொண்டது, சுவாரஸ்யத்திற்கா அல்லது நாமினேஷனில் இருந்து தப்பிக்கவா என மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில், ரஞ்சித் எதுவும் பேசாமல் ஏதோ ஒரு கேம் பிளான் வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என மற்ற போட்டியாளர்கள் வரிசையாக நாமினேட் செய்துள்ளனர். ரஞ்சித்தும் "ஆமா நான் தான் வீட்டை விட்டு வெளியே போவேன்" என தன்னையே நாமினேட் செய்து கொண்டார். மற்றொரு புறம் சவுந்தர்யா பிக்பாஸ் வீட்டில் சவுந்தர்யாவின் செயல்கள் எந்தவித சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தவில்லை என அவரையும் நாமினேட் செய்துள்ளனர்.

மேலும் ஜெஃப்ரி, முத்துவின் மீது இருக்கும் வன்மம் குறையாமல் அவரை நாமினேட் செய்தார். ஒது ஒருபுறம் இருக்க ஆண்கள், பெண்கள் அணி இடையே கிச்சன் பிரச்சனை தலைவலியாக அமைந்தது. தர்ஷா குப்தா 'எங்களோட நூடுல்ஸ் காணோம்' என விஷாலை வம்பிழுக்க, பின்னர் அது பெண்களின் மளிகை பொருட்கள் லிஸ்டிலேயே இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்ப வேண்டும் என முடிவு செய்த பிக்பாஸ், பெற்றோர்களில் சிறந்தவர் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் விவாதம் வைத்தார்.

இதையும் படிங்க: ’வேட்டையன்’ பாத்தாச்சா?... இந்த வாரம் தமிழ் படங்கள் ஒடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?

ஜாக்குலின் தனது அம்மா எப்படி தன்னந்தனியாக வளர்த்தார் என சொந்த கதையை கூறினார். இதன் பிறகு குறுக்கிட்ட அருண் பிரசாத், “ஆண்கள் அழக்கூடாது, அது அவமானம்” என கூற, விவாதம் சூடுபிடித்தது. இதற்கு ஜாக்குலின், “அதெல்லாம் யார் வேணா அழலாம், அழுகை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு தான்” என ஆவேசமாக பதிலளித்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மேலாக சுனிதா, ஜாக்குலின் குறித்து அன்ஷிதாவிடம் முனுமுனுத்தார். "அவ என்கிட்ட நல்லா தான் பேசுறா, ஆனா ட்ரிக்கர் பன்ற மாதிரி இருக்கு, அது அவளோட இயல்பு" என சுனிதா கூறினார். நாளின் இறுதியில் விஷால், ரஞ்சித், ஜாக்குலின் போல் நடித்துக் காண்பிக்க வீடு கலகலப்பாக உறங்கியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.