ETV Bharat / entertainment

சேச்சி, சேட்டன்மார்கள் வேற லெவல்.. ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்! - vijay speaks malayalam

Vijay speaks Malayalam: கேரளாவில் கோட் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காணக் குவிந்த ரசிகர்களிடம், நடிகர் விஜய் மலையாளத்தில் உரையாடி நன்றி கூறினார்.

ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்
ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:38 PM IST

ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய விஜய்

திருவனந்தபுரம்: வெங்கட் பிரபு இயக்கத்தில், கோட் (greatest of all time) என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கோட் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த விஜய்க்கு, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் விஜயைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். அப்போது ஒரு வாகனத்தின் மீது ஏறி நின்று, அவர்களிடம் விஜய் உரையாடினார். அப்போது மலையாளத்தில் பேசிய விஜய், “சேச்சி, சேட்டன்மார் உங்க எல்லாரையும் கண்டதில் சந்தோஷங்கள்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கேரளாவில் மகாபலியைக் கொன்று ஓணம் பண்டிகையை கொண்டாடும் போது மக்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்களோ, அதேபோல், உங்கள் முகங்களை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ்நாட்டில் உள்ள எனது நண்பா, நண்பிகள் போல நீங்களும் வேற லெவல்” என்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: “ரஜினிகாந்த் பயோபிக்கில் நடிக்க விரும்பினேன்” - இளையராஜா திரைப்படம் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.