ETV Bharat / entertainment

விடுதலை 2ம் பாகத்தில் இருந்து 'தினம் தினமும்' பாடல் வெளியானது! - VIDUTHALAI 2 FIRST SINGLE OUT NOW

நடிகர் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை 2ம் பாகம் படத்தில் இருந்து தினம் தினமும் என்ற முதல் பாடல் வெளியாகி உள்ளது.

விடுதலை முதல் பாடல் போஸ்டர்
விடுதலை முதல் பாடல் போஸ்டர் (Credits - VIJAYSETHUPATHI X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 3:32 PM IST

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து பாடிய 'வழிநெடுக காட்டுமல்லி' பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையும் படிங்க : நயன்தாரா 'நானும் ரௌடி தான்' பட காப்புரிமை விவகாரம்... நோட்டீஸ் அனுப்பிய தனுஷ் வழக்கறிஞர் கூறுவது என்ன?

விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் சிறிய அளவில் மட்டுமே இருந்தது. அதனால், இரண்டாம் பாகத்தில் முழுவதும் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யாப், கிஷோர், கென் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இப்படம் இந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இப்படத்தில் இருந்து ’தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை அவருடன் இணைந்து அனன்யா பட் பாடியுள்ளார். வழிநெடுக காட்டுமல்லி பாடலை போலவே இந்த பாடலும் கேட்டவுடன் பிடித்துவிடும் வகையில் இசை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.