ETV Bharat / entertainment

ஆணவப் படுகொலை என்பது பாசத்தின் வெளிப்பாடு: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு - Actor ranjith controversy

Actor ranjith honor killing controversy: கவுண்டம்பாளையம் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித், ஆணவப் படுகொலை என்பது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளை மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தின் வெளிப்பாடு எனவும், காதலுக்காக பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு புகைப்படம்
நடிகர் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 6:19 PM IST

சேலம்: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'கவுண்டம்பாளையம்'. இப்படம் நேற்று (ஆகஸ்ட் 9) வெளியான நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் படம் பார்க்க வந்தார். அப்போது அவருக்கு திரையரங்க நிர்வாகம் மற்றும் திரைப்பட ரசிகர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நடிகர் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஞ்சித் கூறுகையில், "கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்க்காமல் பேசாதீர்கள். அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் எனது படத்தை பார்க்க வேண்டாம். சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள். அவ்வாறு நசுக்கும் போது எவ்வளவு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுக்குதான் தெரியும்" என்றார்.

மேலும் "என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புறமுதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள். கவுண்டம்பாளையம் படத்தின் பெயரில் ஜாதி எதுவும் இல்லை, மேலும் தாய்மார்கள் வெறுக்கும் வகையில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். ஊடகங்கள் மாபெரும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்க்க இழிவான காட்சிகளை பதிவு செய்து வருகிறார்கள்" என கூறினார்.

மேலும் இழிவான காட்சிகள் குறித்து பேசுகையில், "சினிமாவில் இது போன்ற காட்சிகளை கட்டுப்படுத்த சென்சார் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்களை கண்காணிக்க சென்சார் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களது மனசாட்சியே சென்சார், ஆகையால் சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான சூழல் இல்லை இதற்கு கட்டுப்பாடு அவசியம்" என்றார். இதனைத்தொடர்ந்து ஆணவப் படுகொலை பற்றி பேசிய நடிகர் ரஞ்சித், "ஆணவப் படுகொலை என்பது பெற்றோர்கள் அவர்கள் பிள்ளை மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தின் வெளிப்பாடு, காதலுக்காக பெற்றவர்களை ஏமாற்றாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "காவிரி உபரி நீரை 100 ஏரிகளிலும் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சேலம் விவசாயிகள் மனு! - Cauvery surplus water issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.