கொச்சி: மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் நடித்து வெளியான ஆவேஷம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் வெளியாகி பாராட்டை பெற்றது மட்டுமில்லாமல் ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆவேஷம் படத்தின் இலுமினாட்டி உள்ளிட்ட பல பாடல்கள் இன்றளவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வலம் வருகிறது.
மேலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஃபகத் ஃபாசிலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரளா மாநிலம் கோத்தமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய ஃபகத் ஃபாசில், "எனக்கு கவனக்குறைவு, அதிக செயல்பாடுக் குறைபாடு பிரச்சனை Attention-deficit/hyperactivity disorder (ADHD) ஏற்பட்டுள்ளது. பொதுவாக சிறுவயது குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் 41 வயதான எனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஃபகத் ஃபாசில் தற்போது மலையாளத்தில் 'odum kuthira chaadum kuthira' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழில் ரஜினிகாந்துடன் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் தென்னிந்திய பிரபல நடிகையான சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் 1ஆம் தேதி இசை வெளியீடு; மே 29ல் செகண்ட் சிங்கிள்.. 'இந்தியன் 2' அப்டேட்! - Indian 2 Audio Launch