ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை! - WEST BENGAL BY ELECTION

மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முதலமைச்சர் மம்தா பானர்ஜி (image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 12:04 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் உள்ள நைஹாட்டி, ஹரோவா, மேதினிபூர், தல்தாங்ரா, சீதை (SC), மற்றும் மதரிஹாட் (ST) ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் ஐந்து தொகுதிகள் ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் வசம் இருந்தது. மதரிஹாத் தொகுதி மட்டும் பாஜக வசம் இருந்தது.

கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 69.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியதில் இருந்தே அனைத்து ஆறு தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக நண்பகல் நிலவரப்படி சிதாய் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சங்கீதா ராய், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தீபக் குமார் ராயை விட 1,02,051 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். மதரிஹாட் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபிரகாஷ் டோப்போ, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராகுல் ரோகாரை விட 25165 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!

நைஹட்டி தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சனத் டே, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரூபக் மித்ராவை விட 44974 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். அதே போல ஹரோவா சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்கே ரபியுல் இஸ்லாம், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பியாருல் இஸ்லாமை விட 83003 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேதினிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுஜோய் ஹஸ்ரா, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஜித் ராய் என்பவரை விட 22872 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தல்டாங்ரா தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஃபல்குனி சிங்கபாபு, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் அனன்யா ராய் சக்ரவர்த்தியை விட 16101 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அங்கு திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. எனினும் அங்கு நடைபெற்ற 6 பேரவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.