ரிஷிகேஷ் : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று உள்ளன. இந்நிலையில், தொழிலதிபரும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஒட்டுமொத்த நாடும் தான் அரசியலில் இறங்க வேண்டும் என விரும்புவதாகவும் நாட்டு மக்களுள் ஒருவாராக தான் எப்போது இருந்து வருவதாகவும் ராபர்ட் வதேரா தெரிவித்து உள்ளார். மேலும், மக்கள் தங்களில் ஒருவராக தன்னை காண்பதாகவும் 1999 ஆம் அண்டு முதல் அமேதி தொகுதியில் தான் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகம் ராபர்ட் வதேரா தெரிவித்தார்.
அமேதி தொகுதி மக்களுக்கு வாக்களித்த அனைத்தையும் ஸ்மிரிதி ராணி செய்து முடிக்கவில்லை என அவர் கூறினார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தெரிவித்தார். மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அளும் பாஜக அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் ராபர்ட் வதேரா கூறினார்.
மக்கள் எப்போது காந்தி குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்றும் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி எவ்வாறு கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பதை நாட்டு மக்கள் பார்த்து வருவதாகவும் ராபர்ட் வதேரா கூறினார். அமேதி தொகுதியில் மீண்டும் காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவரே வர வேண்டும் அதுவும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்,.
அரசியலில் முதல் அடி எடுத்து வைத்து, எம்பியாக வேண்டும் என நினைத்தால், அமேதியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என நினைப்பதாக தெரிவித்தார். இதனிடையே அமேதி தொகுதிக்குட்பட்ட கவுரிகஞ்ச் பகுதிகளில் ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரலி தொகுதியில் முறையே ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் களமிறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் அமேதி தொகுதியில் போட்டியிட ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து உள்ளதால் உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
எவ்வாறாயினும் காங்கிரஸ் கட்சியின் மேலிடமே இறுதி கட்ட முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமேதி மற்றும் ரேபரலி தொகுதி வேட்பாளர்களாக ராகுல் மற்றும் பிரியங்கா ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் அடுத்த வாரம் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கூடுதல் வரதட்சனை கேட்ட மணமகன் வீட்டார் சிறைபிடிப்பு! ரூ.20 லட்சம் வசூல் செய்த பெண் வீட்டார்! என்ன நடந்தது? - Uttarakhand Marriage Ruckus