ETV Bharat / bharat

"இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் ராமோஜி ராவ்"- பிரதமர் மோடி புகழாரம் - PM Modi About Ramoji Rao

தனிப்பட்ட சாதனைகளை தாண்டி ராமோஜி ராவ், நாட்டின் வளர்ச்சியின் மீது அதிக அக்கறை மற்றும் ஆர்வம் கொண்டு இருந்தார். செய்தி ஊடகத்தை தாண்டி அவரது முயற்சிகள் என்பது கல்வி, தொழில்துறை மற்றும் சமுதாய நல்லிணக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராமோஜி ராவ், நரேந்திர மோடி
ராமோஜி ராவ், நரேந்திர மோடி (Credits - PM Modi X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 1:09 PM IST

ஹைதராபாத்: பிரதமர் மோடி, "கடந்த சில நாட்களாக செய்தி மற்றும் ஊடக உலகமே மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தது. மக்களவை தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனது மனதை உலுக்கும் விதமாக ராமோஜி ராவ் மறைவு குறித்த செய்தி கிடைத்தது.

எங்கள் இருவருக்கும் இடையிலான உறவை ஒப்பிடும் போது, அவரது மறைவு தனிப்பட்ட விதத்தில் முற்றிலுமாக என்னை பாதித்தது. எப்போதெல்லாம் ராமோஜி ராவ் குறித்த நினைவுகள் எனது மனதில் எழுகிறதோ அப்போதெல்லாம் அவரது ஈடு இணையற்ற செயல்கள் மட்டும் என் நினைவுக்கு வந்து செல்கின்றன.

சாதாரண விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்ட ராமோஜி ராவ், சினிமா, பொழுதுபோக்கு, மீடியா, விவசாயம், கல்வி என பல துறைகளில் தனது ஆளுமையை செலுத்தி தனக்கென ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளார். அதேநேரம் அவரது முழு வாழ்க்கை பயணத்திலும் பொதுவானது என ஒன்றை கூற வேண்டுமானால் அது அவரது பணிவு மற்றும் அடிமட்ட மக்களுடன் இணைந்து செயல்படக் கூடியது தான்.

இந்த குணாதிசயங்கள் அவரை பரந்த அளவிலான மக்களால் விரும்பச் செய்தது. ஊடக உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் ராமோஜி ராவ். நேர்மை, நாணயத்துடன் செயல்படுவது, புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்தியது, சிறப்பான முறையில் செயல்பாடு என அதற்கென தனியாக தர நிலையை உருவாக்கியவர் ராமோஜி ராவ்.

செய்திகளுக்கான பரவலான ஆதாரமாக செய்தித் தாள்கள் இருந்த போது அவர் ஈநாடு பத்திரிகையை தொடங்கினார். 1990களில் காட்சி ஊடகத் துறையில் கால் பதித்த ராமோஜி ராவ் ஈடிவி எனும் சேனலை தொடங்கி பல சேனல்களுக்கு மத்தியில் தனி முத்திரையை பதித்தார். தெலுங்கு மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பான ஈடிவி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கையை முன்னரே நிலைநிறுத்தியது.

இந்த சாதனைகள் மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சியின் மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார் ராமோஜி ராவ். செய்தி ஊடகத்தை தாண்டி கல்வி, தொழில்துறை, சமூக செயல்பாடுகளில் அவரது மேற்கொண்ட முயற்சிகளின் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் ஜனநாயக கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

மேலும் 1980களில் காங்கிரஸ் கட்சி, என்டிஆருக்கு பல்வேறு இடையூறுகளை வழங்கி அவரது அரசை முறையற்ற விதத்தில் பதவி நீக்கம் செய்த போது அதை எதிர்த்து போராடியவர்களில் ராமோஜி ராவின் பங்கு சிறப்பாக காணப்பட்டது. அந்த நேரத்தில், மத்தியிலும் ஆந்திராவிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, ஆனால் எதற்கும் பயப்படாமல் ஜனநாயக விரோத முயற்சிகளை முற்றிலும் எதிர்த்தார்.

அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்திலிருந்து பயனடைவதற்கும் பல வாய்ப்புகளை பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. பல்வேறு விஷயங்களில் அவருடைய கருத்துகளை நான் மிகவும் மதிப்பிட்டேன். நான் முதலமைச்சராக இருந்த நாட்களில் இருந்து, அவரிடம் இருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் கருத்துக்களையும் பெற்றுள்ளேன்.

குஜராத்தில் குறிப்பாக விவசாயம் மற்றும் கல்வியில் நல்லாட்சி முயற்சிகள் பற்றி தெரிந்து கொள்வதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார். 2010ல் எப்போதோ என்னை ராமோஜி பிலிம் சிட்டிக்கு அழைத்தார். அந்த உரையாடலின் போது, ​​குஜராத்தில் குழந்தைகள் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய அவர் ஆர்வமாக இருந்தார்.

இது போன்ற ஒரு கருத்து முன்பு கேள்விப்பட்டிருக்கவில்லை என்று அவர் உணர்ந்தார். அவருடைய ஊக்கமும் ஆதரவும் எப்போதும் அசைக்க முடியாதவை. அவர் எப்போதும் என் நலம் பற்றிக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார். 2012ல், 4வது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்த போது, ​​மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மனதைத் தொடும் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

நாங்கள் ஸ்வச் பாரத் மிஷனைத் தொடங்கிய போது, ​​இந்த முயற்சியின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக அவர் இருந்தார். தனிப்பட்ட முறையில் மற்றும் அவரது ஊடக துறைகள் மூலம் அதை ஆதரித்தார். மகாத்மா காந்தியின் கனவை சாதனை நேரத்தில் நிறைவேற்றி, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கண்ணியத்தை உறுதி செய்தவர் ராமோஜி ராவ்.

அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்ததை அரசு பெருமையாக கருதுகிறது. அவரது தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை அடுத்த தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். தடைகளை வாய்ப்புகளாக மாற்றுவது, சவால்களை வெற்றிகளாக மாற்றுவது, தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி என்பதை அவரது வாழ்க்கையிலிருந்து இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ளலாம்.

கடந்த சில நாட்களாக ராமோஜி ராவ் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், தேர்தல் பணிகளுக்கு நடுவே கூட, அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தேன். மத்தியிலும் சரி, ஆந்திராவிலும் சரி, எனது நண்பர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பாஜக அரசு பதவிப் பிரமாணம் செய்வதை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.

நமது தேசம் மற்றும் சமுதாயத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். ராமோஜி ராவின் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ஊழியர்கள் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக என்றென்றும் ராமோஜி ராவ் இருப்பார்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

(This is a translation of the original piece published in Eenadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.