ETV Bharat / bharat

'ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது' - உறுதியாக சொல்லும் மல்லிகார்ஜுன கார்கே..! - ONE NATION ONE ELECTION

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது என்றும் எதிர் கட்சியின் ஒருமித்த கருத்து இல்லாமல், இதுபோன்ற மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ANI

Published : Oct 31, 2024, 5:14 PM IST

பெங்களூரு: சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உரையாற்றிய அவர், "இந்த முறை தேசிய ஒற்றுமை தினமானது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, இன்று நாம் ஒற்றுமையின் பண்டிகையைக் கொண்டாடுகிறோம், அதே வேளையில் தீபாவளி பண்டிகையையும் கொண்டாடுகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாட்டில் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் ''ஒரே நாடு, ஒரே தேர்தல்'' திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார். மேலும், நாம் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இதன் மூலம் வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதில் நாடு புதிய வேகத்தைப் பெறும் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: '500 ஆண்டுகள் கழித்து வரும் வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி'- வாழ்த்துகள் பதிவிட்ட பிரதமர் மோடி!

அத்துடன், '' இன்று நாம் ஒரே தேசத்தின் அடையாளமான ஆதார் திட்டத்தின் வெற்றியை பார்க்கிறோம். உலக நாடுகளே அதை பற்றி விவாதிக்கின்றன. முன்பெல்லாம் இந்தியாவில் வெவ்வேறு வரி முறைகள் இருந்தன. அதனை, ஒரே நாடு ஒரே வரி என்ற வகையில் ஜிஎஸ்டி-யை கொண்டு வந்தோம். ஒரே தேசம் ஒரே மின்கட்டணம் மூலம் நாட்டின் மின்துறையை வலுப்படுத்தியுள்ளோம். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒருங்கிணைத்தோம்'' என தெரிவித்தார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், '' நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளின் ஒருமித்த கருத்து இல்லாமல், இதுபோன்ற மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது.

பிரதமர் மோடி சொல்வதை செய்ய மாட்டார். இந்த தீர்மானம் நாடாளுமன்றத்துக்கு வரும்போது எல்லோரையும் அவர் நம்பிக்கைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், அது சாத்தியமற்றது. இப்பெரிய சீர்திருத்தத்தை ஒருதலைப்பட்சமாக மத்திய அரசு திணிக்க முடியாது'' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.