ETV Bharat / bharat

மகாராஷ்டிரா காங்கிரசில் திடீர் குளறுபடி! சிறுபான்மை சமூக மக்கள் வாக்குகள் சிதறுமா? என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? - Naseem Khan Resign Congress

மகாராஷ்டிராவில் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படாததை கண்டித்து காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் அரிப் நசீம் கான் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 4:36 PM IST

மும்பை : மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் அரிப் நசீம் கான், மாநிலத்தின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு இஸ்லாமிய வேட்பாளராவது நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக நிறுத்தப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதிய அவர், வாக்கு சேகரிப்பின் பொது மக்கள் இது குறித்து கேட்டால் தன்னிடம் பதில் இல்லாததால் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவ சேனா உத்தவ் அணி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணி இணைந்து மகா விகாஷ் அகாதி என்ற கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு உள்ளது.

இந்த கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முகமது அரிப் நசீம் கான், காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர், சமூக வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து பயணிப்பதே காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்றார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் ஒன்றில் கூட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அனைத்து சிறும்பானமை சமூக அமைப்புகள் மற்றும் தலைவர்கள், பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரிப் நசீம் கான் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மீது தானும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து பயணிப்பதே காங்கிரசின் சித்தாந்தம், அவர்கள் ஓபிசி பிரிவினர், மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் இணைந்து பணியாற்றுவதே காங்கிரஸ் என்றார்.

சிறுபான்மை சமூகங்களில் வேட்பாளர் நிறுத்தாதற்கு என்ன காரணம்? என தான் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் தன்னிடம் கேள்விகள் கேட்டால் அதற்கு தன்னிடம் பதில் இல்லை என்றும் அதனால் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் முடிவெடுத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக மகாராஷ்டிரா மக்களவை தேர்தல் பிரசார கமிட்டில் தன்னை நட்சத்திர வேட்பாளராக அறிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி தெரிவித்து அரிப் நசீம் கான் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம்! என்ன நடந்தது? - Mamata Banerjee Injured

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.