ETV Bharat / bharat

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் தீவிரம்! கொசுக்களால் பரவும் வைரஸ் காய்ச்சல் - தமிழகம் உஷார்! - Kerala West Nile fever

கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Representative image (ANI)
author img

By ANI

Published : May 8, 2024, 5:13 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர் மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஒருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நோய் பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளானவர்களின் மாதிரிகள் புனே நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டதில், அது வெஸ்ட் நைல் பீவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் இல்லை என்றும் முனெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உள்ளிட்ட பூச்சிகளால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பருவமழைக்கு முன்னதாக கொசு ஒழிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

மேலும், வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் குறித்த அறிகுறிகளுடன் காணப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு கேரள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காயச்சல் பல்வேறு மாவட்டங்களில் பரவியது கண்டறியப்பட்டது. அதன் பின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் இந்த வகை காய்ச்சல் முதல் முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. அதன்பின்னரே கேரளாவில் 2011ஆம் ஆண்டு ஆழப்புழாவில் முதல் முறையாக கண்டுபிக்கப்பட்டது. கியூலக்ஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஜப்பான் காய்ச்சலைப் போன்று ஆபத்தானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் காய்ச்சல் சாதாரணமாக 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் முதியவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் இந்த இரண்டு வகை காய்ச்சலுமே கொசுக்கள் மூலமாக பரவுவதாக சுகாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதா.. பொறுத்துக் கொள்ள முடியாது" - சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்! - Sam Pitroda Racist Remarks

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.