ஐதராபாத் : தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஷேக் அக்மல் சுபியான் (வயது 24). தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கஜ்ஜிபவுலி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி விட்டு விடுதிக்கு திரும்பியவர், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்தார்.
தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்து ரத்தம் கொட்டி உள்ளது. யாரோ கீழே விழுந்த சத்தம் கேட்டு அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் விடுதி பொறுப்பாளரிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார்.
தண்ணீர் தொட்டிக்குள் தேடிப் பார்த்த விடுதி பொறுப்பாளர், எதுவும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். இதனிடையே மாலை வேளையில் விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஷேக் அக்மல் சுபியான் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விடுதியில் இருந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்த ஷேக் அக்மல் சுபியானின் சடலத்தை மீட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சுபியானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இளைஞரின் பறிபோன நிலையில், விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஷேக் அக்மல் சுபியான் விடுதி தண்ணீர் தொட்டியில் தவறி விழும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : பாங்காக் பயணியின் பையில் 10 அனகோண்டா - மிரண்டு போன சுங்கத் துறை! என்ன நடந்தது? - Bengaluru Airport Anacondas Seized