ETV Bharat / bharat

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நுணுக்கமான தேர்தல் கள பணி மகாராஷ்டிராவில் வெற்றியை தந்தது எப்படி? - MAHARASHTRA

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது ஒரே இரவில் நடந்த அதிசயம் அல்ல. நுணுக்கமான தேர்தல் உத்திகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றால் இது சாத்தியமாகி உள்ளது.

ஆதரவாளர்களுடன் தேவிந்திர பட்நாவிஸ்
ஆதரவாளர்களுடன் தேவிந்திர பட்நாவிஸ் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 5:35 PM IST

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது ஒரே இரவில் நடந்த அதிசயம் அல்ல. நுணுக்கமான தேர்தல் உத்திகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றால் இது சாத்தியமாகி உள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவிக்கு தேவிந்திர பட்நாவிஸ்தான் தகுதியானவர் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பமாக இருப்பது வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் கள பணி: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது ஒரே இரவில் நடந்த அதிசயம் அல்ல. மக்களவைத் தேர்தலுக்கும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே ஐந்து மாத கால கட்டங்களில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கள அளவில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதை புரிந்து கொள்வது முக்கியம்.

இது குறித்து பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அறிஞர் திலீப் தியோதர்,"தேவேந்திர பட்நாவிஸிடம் முதல் பத்து ஆண்டுகளில் சங்க் பரிவார் அமைப்புகள் எந்த தொடர்பிலும் இருந்ததில்லை. எனினும், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டின் கீழ் அவர் பணியாற்றத் தொடங்கினார்," என்று கூறினார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த தேவிந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்பதாகவும், அரசில் இருந்து விலகி இருந்து அமைப்பு ரீதியாக பணியாற்ற விரும்புவதாக கூறியிருந்தார்.

தேவேந்திர பட்நாவிஸுக்கு சங் அமைப்புகள் ஆதரவு: இது குறித்து நம்மிடம் மேலும் பேசிய தியோதர், "மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜூன் 6ஆம் தேதி பட்நாவிஸ் நாக்பூர் சென்றார். ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஸஹசர்கார்யவா பதவியில் இருந்த அதுல் லிமாயே என்பவரை சந்தித்துப் பேசினார். வரும் காலத்தில் மகாராஷ்டிரா தேர்தலில் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடமும் பட்நாவிஸ் விவாதித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பட்நாவிஸ் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆட்சி பதவியில் நீடித்தார். அவர் பதவி விலகுவது என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் போனது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா: 'வாய்ப்பே இல்லை'.. யார் சிஎம் விவகாரத்தில் பாஜக திட்டவட்டம்..!

இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு அமைப்புகளுக்கும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நிலவுவதற்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு சந்திப்புகள் நடைபெற்றன. பாஜகவுக்காக சங் பரிவார் தினமும் பணியாற்றியது. ஆரம்ப காலகட்டங்களில் நடந்த சந்திப்புகளில் சங் பரிவாரில் உள்ள சில அமைப்புகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதால் பாஜகவுக்கு கிடைக்கும் நன்மை என்று கேட்டன.

டெல்லியில் நடந்த ஆலோசனை: ஜூலை 23ஆம் தேதியன்று பட்நாவிஸுக்கும் சந்திரசேகர் பவான்குலே, சங் பரிவார் நிர்வாகிகள், ஸஹசர்கார்யவா பதவி வகிக்கும் அருண் குமார், அதுல் லிமாயே ஆகியோருக்கும் இடையே மும்பையில் உள்ள யஸ்வந்த் பவனில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அஜித்பவார் டெல்லி சென்றார். அதன் பின்னர் ஆர்எஸ்எஸ்-பாஜக இரண்டுமே அவர் மீது மென்மையான போக்கை கடைபிடித்தன.

ஜூலை 23ஆம் தேதி மும்பை, டெல்லியில் நடந்த சந்திப்புகளில் பவார் மீதான சங் பரிவாரின் அதிருப்தியை பாஜக மென்மையாக கையாண்டது. அப்போது பட்நாவிஸ் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறுவார் என்றும் தேசிய தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாயின. எனினும் தமக்கு தேசிய தலைவர் பதவி மீது ஒருபோதும் ஆசை இல்லை என்றும், தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் கூறினார். அதன் பிறகு, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக விஷயங்களை ஒழுங்கமைக்க அவர் உன்னிப்பாக திட்டமிடத் தொடங்கினார்.

நுணுக்கமாக பணியாற்ற முடிவு: கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பட்நாவிஸ், அதுல் லிமாயே இருவரும் மீண்டும் நாக்பூரில் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் பட்நாவிஸ் மகாராஷ்டிராவில் பாஜகவின் முகமாக இருப்பார் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி சங் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் பட்நாவிஸ் பங்கேற்று 45 நிமிடங்கள் உரையாற்றினார். கட்சியின் பங்கு, சட்டப்பேரவைத் தேர்தலோடு தொடர்புடைய பிரச்னைகள் குறித்து பேசினார். லோக்சபா தேர்தலில் கட்சியின் மோசமான தோல்விக்கு போலியான பிரச்சாரங்கள் எவ்வாறு காரணமாக இருந்தன என்றும், பிற சிக்கல்கள் குறித்தும் பேசினார். இதன் தொடர்ச்சியாக பாஜகவுக்கு ஆதரவாக களத்தில் பணியாற்ற வேண்டும் என்று அனைத்து சங் பரிவார் அமைப்புகளும் தீர்மானித்தன.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு சங் பரிவார் அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் இடையே கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வளவு நுணுக்கமாக பணியாற்ற வேண்டும் என்பது குறித்து உத்திகள் வகுக்கப்பட்டன. அதாவது ஹரியானாவில் மேற்கொண்ட உத்தியைப் போல மகாராஷ்டிராவிலும் தேர்தல் உத்திகளை வகுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் சங் பரிவார் அமைப்புகள் மூலம் பாஜகவுக்கு மறைமுகமான உதவிகள்தான் அளிக்கப்படுகிறது," என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.