டெல்லி : கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் முகேஷ் தலால் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் நிலேஷ் கும்பனி தாக்கல் செய்த மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.
அதேபோல், பகுஜான் சமாஜ் மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வான முதல் வேட்பாளர் என்ற சாதனையை மட்டுமின்றி பாஜகவின் முதல் அன்னபோஸ்ட் வேட்பாளர் என்ற கூடுதல் சிறப்பையும் முகேஷ் தலால் பெற்று உள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்று கூட கூறலாம். ஆனால் இது போன்ற சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்தது இல்லையா? என்று கேட்டால் கடந்த 1951 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கன்னவுஜ் மக்களவை தொகுதியில் கடந்த 2012ஆம ஆண்டு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்வானார். அந்தாண்டு உத்தர பிரதேச முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றுக் கொண்ட நிலையில் காலியான கன்னவுஜ் தொகுதியில் போட்டியின்றி டிம்பிள் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலு, ஒய்.பி சவான், பரூக் அப்துல்லா, ஹரே கிருஷ்ணா மஹ்தப், டி.டி கிருஷ்ணமாச்சாரி, பி.எம் சயீத், எஸ்.சி ஜமீர் ஆகியோர் இதற்கு முன் போட்டியின்றி மக்களவைக்கு தேர்வானவர்களில் முக்கியமானவர்கள். பெரும்பாலான நேரங்களில் காங்கிரஸ் தலைவர்களே அதிகளவில் மக்களவைக்கு போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
சிக்கிம், ஸ்ரீநகர் பகுதிகளில் தான் அதிகளவில் போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெறும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 7 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து 1951 மற்றும் 1967 மக்களவை தேர்தல்களில் தலா 5 வேட்பாளர்கள், 1962 தேர்தலில் 3 பேர், 1977 ஆம் ஆண்டு 2 மற்றும் 1971, 1980, 1989 ஆண்டுகளில் தலா ஒருவரும் மக்களவை தேர்தல்களில் போட்டியின்றி தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முதல் வெற்றி! சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு! எப்படி நடந்தது? - Lok Sabha Election 2024