ஹத்ராஸ் (உத்தரபிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலத்தின் கமலா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்ராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் அனுஜ் குமார் அகர்வால். இவர் சிக்கந்த்ரா- போட்லா சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் சவுரப் அகர்வால். சவுரப் அகர்வால், நொய்டாவில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நொய்டாவின் செக்டார் 66-இல் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளியன்று சவுரப் அகர்வால் குடும்பத்துடனும், அண்ணன் அனுஜ் குமார் அகர்வால் குடும்பத்துடனும் சேர்ந்து ஆக்ராவுக்குச் சென்றுள்ளனர். பின் மறுநாள் (நேற்று) கங்கையில் குளித்துவிட்டு, பெலோன் வாலி மாதாவை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் ஆக்ராவுக்கு வந்தார். மறுநாள் காலை அந்தக் குடும்பம் கங்கையில் குளித்துவிட்டு, பெலோன் வாலி மாதாவைத் தரிசித்துவிட்டு 8 பேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: வனத்துறையில் அவுட் சோர்சிங் முறையை ஏன் அரசு கைவிட வேண்டும்? வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுவது என்ன?
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. அதில் கவுரங் அகர்வால் (10), நிதாய் அகர்வால் (5), சேத்தன் அகர்வால் (1), சோனம் அகர்வால் (40), ரூபி அகர்வால் (38) ஆகியோர் 5 பேரும் விபத்தில் உயிரிழந்த நிலையில், சவுரப் அகர்வால் (40), தன்வி அகர்வால் (14), அனுஜ் அகர்வால் (42) ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹத்ராஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்த சம்பவத்தில் இருந்த சவுரப் அகர்வால் கூறுகையில், “எனது அண்ணன் அனுஜ் அகர்வால் தான் காரை இயக்கி வந்தார். அப்போது திடீரென சாலையில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி அருகில் இருந்த பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்தது.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காரின் கண்ணாடியை இரும்புக் கம்பியால் உடைத்து காருக்குள் சிக்கியவர்களை வெளியே எடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்” என்றார்.
இதையடுத்து, இந்த விபத்து குறித்து பேசிய சதாபாத் வட்ட அதிகாரி ஹிமான்சு மாத்தூர், “காயமடைந்தவர்களை ஹத்ராஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 5 பேரின் உடல்களும் பால்கேஷ்வர் காட்டில் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டன” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.