ETV Bharat / bharat

டெல்லியில் பயங்கரம்: தீபாவளி தினத்தில் மாணவன் உள்பட இருவர் சுட்டுக்கொலை! - DELHI DOUBLE MURDER

ஷாஹ்தாராவில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே மாணவன் உள்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

holding gun representative image
டெல்லியில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 11:04 AM IST

Updated : Nov 1, 2024, 1:07 PM IST

டெல்லி: தீபாவளி தினமான நேற்றிரவு (அக்டோபர் 31), கிழக்கு டெல்லியின் ஷாஹ்தாராவில் பட்டாசு சத்தத்திற்கு மத்தியில் எழுந்த தோட்டாக்கள் சத்தம் இரண்டு பேரின் உயிரைப் பறித்தது. ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8:30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை நோக்கி, அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சிறுவன் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், 40 வயதான ஆகாஷ், அவரது மருமகனான 16 வயதுடைய ரிஷப் ஷர்மா ஆகியோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆகாஷின் பத்து வயதுடைய மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகப் பேசிய ஷாஹ்தாரா மாவட்டத்தின் காவல் துணை ஆணையர் பிரசாந்த் கௌதம், "வியாழன் (அக்டோபர் 31) மாலை சுமார் 8:30 மணியளவில் ஃபர்ஷ் பஜார் காவல் நிலையப் பகுதியின் பிஹாரி காலனியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 40 வயதான ஆகாஷ், அவரது 16 வயது மருமகன் ரிஷப் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஆகாஷின் மகன் கிரிஷ் சர்மாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க
  1. தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்துக்கள் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியது இதுதான்!
  2. அதிக பட்டாசுகளோடு சென்ற ஸ்கூட்டி.. சிதறிய உடல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!
  3. மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை.. வணிகர்களுக்கு காலையிலேயே அதிர்ச்சி!

ஃபர்ஷ் பஜார் காவல்துறை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைத் தொடங்கினர். அப்போது, கொலை சம்பவம் நடந்த வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், பூந்தி எனும் இளைஞன், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் கொலை செய்யப்பட்டவரின் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டு, துப்பாக்கியை எடுத்து ஒருவர் பின் ஒருவர் மீது சரமாரியாகச் சுட்டுள்ளார் என ஆகாஷின் குடும்பத்தினர் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், இந்த கொலைகள் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Tamil Nadu
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Last Updated : Nov 1, 2024, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.