ஆரா : சனாதன தர்மம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பீகார் மாநிலம் ஆரா முதன்மை நீதிபதி சம்மன் வழங்க உத்தரவிட்டு உள்ளார். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துகள் மனதை புன்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து இருந்ததாக கூறி தரீந்தர் பாண்டே என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு ஆரா முதன்மை நீதிபதி மனோரஞ்சன் குமார் ஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பக் கோரி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதேபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வடமாநிலங்களில் பலர் கண்டனங்கள் எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேருக்கு நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காங்கிரஸ் இரண்டவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! முன்னாள் முதலமைச்சர்கள் மகன்களுக்கு வாய்ப்பு!