ETV Bharat / bharat

சூரியப் புயல் குறித்து புகைபடங்களை வெளியிட்ட ஆதித்யா எல் 1 விணகலம் - ADITYA L1 - ADITYA L1

ADITYA L1: சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், சூரியனில் இருந்து வெளிவந்த சூரியப் புயல்களை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் புகைப்படங்கள்
சூரியனின் புகைப்படங்கள் (Credits - ISRO X page)
author img

By PTI

Published : Jun 10, 2024, 5:58 PM IST

ஹைதராபாத்: சூரியன் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோவும் (ISRO) இந்த ஆய்வு களத்தில் இறங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இது 125 நாட்கள் பயணித்து, கடந்த ஜனவரி மாதம் சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சூரிய வெடிப்பை படம் பிடித்து அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மே மாதத்தின் போது சூரியன் இயங்கும் நிலை குறித்து புகைப்படங்களை பதிவு செய்து அனுப்பி உள்ளது. இதில் சூரியனின் காந்த பகுதிகளையும், சூரியப் புள்ளிகளையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.

சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT - Solar Ultraviolet Imaging Telescope), விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC - Visible Emission Line Coronagraph) ஆகியவை சூரியனில் இருந்து வெளிவந்த சூரியப் புயல்களை பல்வேறு கோணங்களில் தெளிவாக படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அக்னிபான் சோதனை எதற்கு? அடுத்த இலக்கு இதுவா? சென்னை ஐஐடியின் பிரத்யேக தகவல்கள்! - Agnibaan Sorted launch

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.