பண்டா: மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து பண்டா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த வாகனத்துடன் மோதால் இருக்க தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகமாக திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கன்னூர் அடுத்த காளிச்சநடுக்கம் பகுதியை சேர்ந்த பத்மகுமார் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தலசேரியில் இருந்து காசர்கோடு நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக கார் எதிரே கேஸ் சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: "தேர்தல் வெற்றிக்கு பின் பொது சிவில் சட்டம் அமல்" - உள்துறை அமைச்சர் அமித் ஷா! - UCC Will Implement Says Amit Shah