தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.15 லட்சம் நிதி உதவி

By

Published : Jan 8, 2022, 2:29 PM IST

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் வீதம் 15 லட்சம் மற்றும்  காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சரஸ்வதி என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சரின் நிதி உதவி
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சரின் நிதி உதவி

விருதுநகர்: சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான சோலை பட்டாசு தொழிற்சாலையில் (ஜனவரி 5) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர், எட்டு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் ஒரு அரை வெடித்து தரைமட்டமானது. அதில் பணிபுரிந்த ஆலையின் உரிமையாளர் உள்பட ஏழு நபர்கள் காயமடைந்து கோவில்பட்டி சாத்தூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சரின் நிதி உதவி

இதில் தற்போது வரை ஐந்து நபர்கள் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் வீதம் 15 லட்சம் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சரஸ்வதி என்பவரின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அதில் காயமடைந்தோர் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க : நடிகை குஷ்பூ, பொன்னார் உள்பட 153 பேர் வழக்குப்பதிவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details