தமிழ்நாடு

tamil nadu

ரூ.22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம்: வயதான பெண் எஸ்பியிடம் மனு!

By

Published : Feb 16, 2021, 3:36 PM IST

கன்னியாகுமரி: 22 லட்ச ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி வயதான தாய், அவரது மாற்றுத்திறனாளி மகன் ஆகியோர் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

Money fraud petition  ரூ.22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம்  Finance Company Rs 22 lakh scam In Kanniyakumari  Muthoot Finnance Scam  ரூ.22 லட்சம் மோசடி  கன்னியாகுமரியில் ரூ.22 லட்சம் மோசடி  A Old Lady Petition Money Fraud To SP in kanniykumari
A Old Lady Petition Money Fraud To SP in kanniykumari

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டிபுரம் எட்டாமடை பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியமுத்து. இவரது கணவர் ராஜரத்தினம் மறைவுக்குப் பிறகு கிடைத்த பணத்தை பாக்கியமுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிய பாண்டிபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் முதலீடு செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த ஒரு தனியார் நிதிநிறுவன ஊழியர் எங்கள் வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். அவர்களின் பேச்சை நம்பிய பாக்கியமுத்து 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். இதேபோல், அவர், அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் நான்கு தவணைகளாக ரூபாய் 9 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல தவணையாக தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தப்பட்டது. இந்தப் பணத்திற்கு உண்டான ரசீதுகளை நிதி நிறுவனத்தினர் கொடுத்துள்ளார். ஆனால், பாண்ட் எதுவும் கொடுக்கவில்லை. அதைக்கேட்ட போது தலைமை அலுவலகத்திலிருந்து வந்ததும் தருகிறோம் என்று கூறினர்.

ஆனால், இதுவரை வழங்கவில்லை. பின்னர் அவர்கள் கஸ்டமர் கேரில் போன் செய்து தகவல் கேட்டபோது பணத்தை டெபாசிட் செய்யாமல் அந்த பணத்தை நிறுவனத்தில் மேலாளர் உள்பட மூன்று ஊழியர்கள் சேர்ந்து போலி ரசீது கொடுத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாக்கியமுத்து தனது மகன் மணியுடன் நாகர்கோவில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

எஸ்பியிடம் மனு அளித்த தாய், மகன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பக்கியமுத்து கூறுகையில்,"என் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. கணவரின் ஓய்வு பணப்பலன்களை தனியார் நிதி நிறுவனம் ஏமாற்றி விட்டது. எனவே தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவம்: போலி மருத்துவரின் உதவியாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details